போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பக்கார் இருபத்து நான்கு மணி நேரமும் டிவிட்டரைச் சுற்றிச் சுற்றி வ்ருகிறார். எதிரணி அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் ஏதாவது தவறு செய்வதாக தெரிந்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கிறார்.
சில மணி நேரங்களில் அவர்கள் அள்ளிக் கொண்டு செல்லப்பட்டுத் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
இனத்தையும் சமயத்தையும் பழிக்கும் பதிவுகளால் நாட்டின் பாதுகாப்பு கெடாமல் கட்டிக்காக்க வேண்டியிருப்பதாக காலிட் தம் செயல்களைத் தற்காத்துப் பேசுகிறார்.
ஆனால், சிறுசிறு விவகாரங்களுக்கெல்லாம் பாய்ந்துகொண்டு செயல்படும் போலீஸ், ஆளும் கட்சியினர் என்ன சொன்னாலும் கண்டுகொள்வதில்லை என்று சிலர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது.
கடந்த நவம்பரில் அம்னோ பொதுப் பேரவையில், முன்னாள் துணை அமைச்சர் மஷிடா இப்ராகிம் கெடாவில் சீனர்கள் திருக்குர்ஆனுக்குத் தீ வைத்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் அது மனநோயுள்ள ஒரு மலாய்க்காரரின் வேலை என்று அதற்குமுன் ஒரு விளக்கம் அளித்திருந்த போதும் அதைப் பொருட்படுத்தாது மஷிடா தாம் சொல்ல நினைத்ததைச் சொல்லி வைத்தார்.
அதன்மீது பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்டது. ;போலீசும் வேகமாக செயல்பட்டு பலரிடம் விசாரணை செய்தது.
போலீஸ் தலைவரின் கூற்றுப்படிப் பார்க்கப்போனால் இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு. இன, சமய இணக்கநிலையைக் கெடுக்கும் தன்மை கொண்டது. அதற்கும் மேலே, அது ஒரு பொய்யான குற்றச்சாட்டு.
இப்போது பல மாதங்கள் கடந்து விட்டன. விசாரணை தொடர்கிறது. மஷிடா விசாரணைக்கு அழைக்கப்பட்டாரா என்பது கூட தெரியவில்லை.
டிஏபி அவருக்கு எதிராக போலீசில் புகார் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டும்கூட அவ்ர் அதைப் பற்றிக் கவலைப்பட்டவராக தெரியவில்லை. செய்த தவற்றுக்கு மன்னிப்பு கோரவும் அவர் தயாராக இல்லை.
“அவர்கள் என்மீது வழக்கு போடுவதாக இருந்தாலும் போடட்டும்”, என்று சாதாரணமாக சொன்னார்.
போலீஸ் தலைவரைக் கேட்டதற்கு வதந்தியைப் பரப்பியதற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 505பி-இன் கீழ் முன்னாள் துணை அமைச்சர்மீது விசாரணை நடப்பதாகச் சொன்னார்.
“அது ‘கைது செய்யப்பட வேண்டிய’ ஒரு வழக்கு அல்ல. அதனால்தான் அவரைக் கைது செய்யவில்லை”, என்றார்.
வரும் ஆனால் வராது.
மறந்து விட்டோம்,,
பாக்கத்தான் ஆட்சிக்கு வந்தால் தினந்தோறும் இது போன்ற செயல்களில் சீனன் ஈடுபட்டு இனகலவரத்தை உண்டுபன்னுவான்..நல்ல வேலை..