நேற்று கிளானா ஜெயா சுங்கத் துறை வளாகத்தில் ஜிஎஸ்டி- எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட 29 பேரை 2 நாள்களுக்குத் தடுத்து வைக்க நீதிமன்ற ஆணையைப் போலீசார் பெற்றுள்ளனர்.
29 பேரில் 25 பேர் சமூக ஆர்வலர்கள். நேற்றைய உள்ளமர்வுப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்கள். ஏனைய நால்வர் நேற்றிரவு கிளானா ஜெயா போலீஸ் நிலையத்துக்கு வெளியில் கைது செய்யப்பட்டவர்கள்.
நேற்றுக் காலை சுமார் 100 சமூக ஆர்வலர்கள் சுங்கத்துறை வளாகத்தில் திரண்டு தங்களின் 106 கேள்விகளுக்கு விடை வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
விடை கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் அங்கேயே உள்ளமர்வுப் போராட்டம் நடத்தத் தீர்மானித்தனர். மாலை மணி 5 அளவில் போலீஸ் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து 82 பேரைக் கைது செய்தது.
கைது செய்யப்பட்ட பலர் நேற்றிரவே விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் என்ன அத்தனை பெரிய குற்றவாளிகளா ?