ஐஜிபி: ஹுடுட் பற்றிக் கேள்வி எழுப்புவது ஐஎஸ்ஸுக்கு கோபத்தை உண்டு பண்ணலாம்

isஹுடுட்  பற்றிக்  கேள்வி  எழுப்ப  வேண்டாம்  என்று  போலீஸ்  படைத்  தலைவர் (ஐஜிபி) காலிட்  அபு  பக்கார் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதனால் பயங்கரவாத  அமைப்பான  இஸ்லாமிய  அரசு(ஐஎஸ்)  சினமடைந்து  பதில் நடவடிக்கையை  மேற்கொள்ளலாம்  என்றவர்  எச்சரித்தார்.

“இஸ்லாம்  பற்றியும்  ஹுடுட்  பற்றியும்  வெறுமனே  கருத்துச்  சொல்லிக்  கொண்டிருக்க  வேண்டாம்  என்பதை  நினைவுறுத்துகிறேன். அது  ஐஎஸ் ஆதரவாளர்களுக்குச்  சினமூட்டுவதாக அமையக்கூடும்”, என்று  காலிட்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

அந்த  இஸ்லாமிய  பயங்கரவாத  அமைப்பிடமிருந்து மலேசியா மிரட்டலை  எதிர்நோக்குவதாகக்  குறிப்பிட்ட  அவர், அவர்கள்  இங்கு  தாக்குதல்  நடத்தத்  திட்டமிட்டிருப்பதை  உளவுத்  தகவல்கள்  காண்பிப்பதாகக்  கூறினார்.