பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 1948 தேச நிந்தனைச் சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை இன்று தற்காத்துப் பேசினார். இதே சட்டத்தைத்தான் 2012-இல் எடுத்தெறியப் போவதாக அவர் கூறினார். பிறகு கடந்த ஆண்டில் முடிவை மாற்றிக் கொண்டார்.
இன்று, கோலாலும்பூரில் 208-வது போலீஸ் தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய நஜிப், அச்சட்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவது பற்றி அதிகாரிகள் வருத்தப்பட வேண்டியதில்லை என்றார்.
“சிலர் இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல என்பார்கள்.
“நான் சொல்கிறேன், அப்பட்டமான சுதந்திரம் என்பதே கிடையாது; நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமை என்ற ஒன்றிருக்கிறது. அதன்றி அப்பட்டமான சுதந்திரம் என்பதே இல்லை”, என்றாரவர்.
அச்சட்டம் இனங்களுக்கிடையில் நல்லுறவுகளை உறுதிப்படுத்தத் தேவைப்படுகிறது என்பதை வலியுறுத்திய நஜிப், அதுவும் விரைவில் அறிமுகம் காணவிருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதைத் தடுப்பதற்கு தேவைப்படுவதாகக் கூறினார்.
இப்படிப்பட்ட தடுப்புச் சட்டங்கள் தீவிர வன்முறைகளைத் தடுத்து நிறுத்த உதவும் எனப் பிரதமர் குறிப்பிட்டார்.
சரியாக சொன்னிர்கள் பிரதமரே..
நீ எதற்கையா வருத்தப் பட்டீர், இதற்கு வருத்தப் பட.
அவநம்பிக்கை நாயகனின் அடையாளச் சின்னம்.
தேசநிந்தனை என்றால் என்னவென்று தெரியாத அறிவிலிகள் வருத்த பட என்ன இருக்கிறது.
நம் நாட்டில் மக்கள் பேசக்கூடாது; ஆர்ப்பாட்டம் பண்ணக்கூடாது, அரசை எதிர்க்கக் கூடாது; ஆமாம் சாமி போடணும். எந்த ஊழலையும் தட்டிக்கேட்கக் கூடாது; வாய்மூடிக் கொள்ளவேண்டும். …ஜி.எஸ்.டி யை எதிர்த்துக் கேள்விக் கேட்கக்கூடாது. உங்க இஷ்டம் போல எதையும் செய்வீர்கள். ஆனால் மக்கள் நலனுக்காக மற்றவர்கள் கேள்விக் கேட்டால் தேச நிந்தனை என்பீர்கள். அட் போங்க, நீங்களும் உங்க தேச நிந்தனையும்…
அரசியலுக்கும், உரிமைக்கும் தேச நிந்தனைக்கும் வேறுபாடு தெரியாதது போல் நடிக்கும் கபோதியோ?????