கூட்டரசு அரசமைப்பை நிலைநிறுத்தி ஹுடுட் சட்டம் கொண்டு வருவதைத் தடுக்க வேண்டும் என மலாய்ச் சான்றோர்கள் 25-பேரடங்கிய குழு புத்ரா ஜெயாவைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து மலேசியா மிதவாதப் பாதையைத் தேர்ந்தெடுத்து அந்தப் பாதையில்தான் புத்ரா ஜெயா நாட்டைச் செலுத்திக் கொண்டிருக்கிறது என அக்குழு இன்று ஓர் அறிக்கையில் கூறியது.
“பாஸின் ஹுடுட் சட்டம் அமலாக்கப்பட்டால் மலேசியா மிதவாதப் பாதையைக் கைவிடுவதாகத்தான் உலகுக்குத் தோன்றும்”, என அது கூறிற்று.
பல இனங்களையும் சமயங்களையும் கொண்ட மலேசியாவில் ஹுடுட்டைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்றும் அது வினவியது.
கூட்டரசு அரசமைப்புத்தான் நாட்டின் தலையாய சட்டமாகும். அதைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஜி25 கேட்டுக்கொண்டது.
ஆளுநர் மன்றமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல். இருப்பினும், கிளந்தான் பாஸ் ஆதரவாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிலைநிறுத்தியது. சட்டம் அமலுக்கு கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளிக்கவில்லையே…எல்லாம் அரசியல் பக்குவமே!!!!
இவங்களுக்கு பக்கவாதம் வருவது உறுதி ஆனதால் தலை தெறிக்க ஆடுகின்றனர்.
தீவீரவாதம் தலைக்கு ஏறி நிற்கின்றது. இப்பதான் இவர்கள் மிதவாதத்தைப் பற்றி பேசி கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் என்ன கனவுலகில் இருக்கின்றனரா?
மலாய் சான்றோர்கள் 25-பேரடங்கிய குழுவினரின் இந்த அறிக்கை “ISIS” பயங்கரவாத அமைப்புக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளதால் நம் நாட்டின் மீது எந்நேரத்திலும் அவர்கள் தாக்குதலை நடத்தும் சாத்தியம் அதிகமாக இருக்கிறது என்று நமது “IGP” நாளை அறிக்கை வெளியிட்டு மக்களுக்கு நகைச்சுவை உணர்வை தூண்டலாம்.