ஹுடுட் அரசமைப்புக்கு ஏற்ப உள்ளதா என்று வாதமிடலாம். அதற்கு அனுமதியுண்டு ஆனால், ஹுடுட் சட்டம் பற்றி விவாதிப்பதற்கு அனுமதியில்லை என்கிறார் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார்.
“இஸ்லாமிய சட்ட விவகாரங்கள் பற்றிக் கருத்துச் சொல்லக் கூடாது. அது அரசமைப்புக்கு ஏற்புடையதா என்று விவாதிக்கலாம். பிரச்னையில்லை.
“ஆனால், ஹுடுட் சட்டம் பற்றிப் பேசுவது, அது நியாயமற்ற சட்டம் என்று சொல்வது கூடாது. அது அச்சட்டம் பற்றிக் கேள்வி எழுப்புவதாகும்”.
இது இஸ்லாத்துக்கு மட்டுமல்ல எல்லாச் சமயங்களுக்கும் பொருந்தும் என காலிட் கூறினார்.
“எந்தச் சமயத்தைப் பற்றியும் கேள்வி எழுப்பக் கூடாது. எழுப்பினால் நடவடிக்கை எடுப்போம்”, என்றார்.
அட என்னடா இது. நம்மை பாதிக்கும் ஒவ்வொரு விசயமும் விவாதத்துக்கு உரியதே. அப்படி இல்லை என்றால் இது சனநாயகமா அல்லது சர்வாதிகாரமா?. இவன் காவல் துறை அதிகாரியா அல்லது அரசியல் கட்சித் தலைவனா?.
ஜ.ஜி.பி காலிட் காவ ல்துறையின்
உயர்பதவி உடையணிந்தஅதிகாரப்பூர் அம்னொ பேச்சாளர் வானலாவிய அதிகாரம்.படைத்தவர் போல்பேசுகிறார்!
என்ன இவன் குழப்புறான் ? அன்று பேசினால் IS தீவீரவாதிகள் சினம் அடையலாம் என்றான் இன்று வேறு சொல்கிறான் !