பாஸ்: ஹூடுட் சட்ட திருத்தத்திற்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டது

 

hududfederalagreedஹுடுட் சட்ட திருத்தங்கள் கிளந்தான் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அது குறித்து மத்திய அரசு தெரியும் என்றும் அதற்கு ஒப்புதல் அளித்திருந்தது என்றும் கிளந்தான் மாநில அரசின் நிரந்தர அலுவலகத்தில் ஹுடுட்டிற்கு பொறுப்பானவரான தாக்கியுடின் ஹாசான் இன்று கூறினார்.

கடந்த ஆண்டு மத்திய அரசும் மாநில அரசும் கூட்டாக அமைத்திருந்த ஹூடுட் நிபுணத்துவ குழுவில் மத்திய அரசு அளித்திருந்த ஆலோசனைகள் சட்ட திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

“இந்த திருத்தங்களும் செம்மையாக்குதலும் ஒப்புக்கொள்ளப்பட்டவை என்பதோடு நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்”, என்று ஹாசான் மேலும் கூறினார்.

கடந்த வாரம், கிளந்தான் சட்டமன்றம் ஷரியா கிரிமினல் கோட் II சட்டம் 1993 (2015) ஏகமனதாக நிறைவேற்றியது. அதில் 12 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.