2015-இல் மூன்றே மாதங்களில் ஆறு பேர் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்து போனார்கள். அந்த வகையில் இறந்த ஆறாவது கைதி முகம்மட் ஜவாரி முகம்மட் யூனுஸ்.
அவரது இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் நடந்திருக்கும். தொடக்கநிலை விசாரணைகளின் முடிவுகளை போலீசார் வெளியிட வேண்டும் என சுவாராம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
“போலீஸ் காவலில் நிகழும் மரணங்கள்மீது நடத்தப்படும் விசாரணைகளின் முடிவுகளை போலீசார் பொதுமக்களுக்குத் தெரிவிப்பது நல்லது.
“இது தப்பான தகவல்கள் பரவுவதையும் குழப்பங்கள் உருவாவதையும் தடுக்க உதவும்”, என்று அந்த மனித உரிமை அமைப்பு ஓர் அறிக்கையில் கூறியது.
முகம்மட் ஜவாரி 2013-இல் நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பில் மார்ச் 12-இல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
எட்டாண்டுச் சிறையும் மூன்று பிரம்படிகளும் தண்டனையாக வழங்கப்பட்ட அவர் ஈப்போ தடுப்பு மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவர் கழிப்பறைக்குச் செல்லும் வழியில் கீழே விழுந்ததில் தலையில் காயம்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
முகம்மட் ஜவாரி ராஜா பெர்மய்சூரி பைனுன் மருத்துவமனையில் பின்னிரவு மணி 1.25க்கு காலமானார்.
தரமற்ற/ பொறுப்பற்ற போலிஸ் தலைவர்கள் இருக்கும் வரையில் இம்மாதிரியான சம்பவங்கள் நடப்பது ஆச்சரியப் படுவதற்கில்லை!!!! கடைமையை தவறவிட்டுவிட்டு செம்மறி ஆட்டுக்கு சிரைக்கப்போனால் ?????
வேலியே பயரை மேயும் போது நியமவது ?நீதியாவது ?மக்கள் சிந்தித்து தெளியவான முடிவு எடுக்கவேண்டும். நம் இளையத் தலைமுறையனரும் பொறுப்புடன் நடக்கவேண்டும் .
இது மேற்கத்திய நாட்டில் நடந்திருந்தால் அதற்க்கு பதில் அடியே வேறு. அங்கு ஒவ்வொரு உயிர்க்கும் காரணம் தெரிய வேண்டும். அதிலும் காவல் துறை விளக்கவேண்டும் — அங்கு ஒளிய முடியாது.
இது ஹுடுட்-ஐ விட கேவலமானதாகத் தெரியவில்லையா? ஈவு இரக்கமில்லாத அரக்கத் தனம் இது. குற்றவாளிகளைப் பிடிக்கத் தெயாதவர்களா? அவர்களைப் பிடித்து கூண்டில் ஏற்ற இங்கே சட்டம் இல்லையா? தண்டனை பெற்றுத்தர இங்கே சட்டம் இல்லையா? பிறகு எதற்கு கோழைத்தனமான செயல்? போலிசே ஆனாலும் சுட்டுக்கொல்வதும் குற்றம் தான்…போலிசும் கூட சட்டத்தைக் கையிலெடுப்பது குற்றமே…