பிரதமரும் நிதி அமைச்சருமான நஜிப் அப்துல் ரசாக், 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் உள்ளூர் வங்கிகளிடம் வாங்கியுள்ள க டன்கள் பற்றி நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு விரிவாக பதிலளிக்க மறுத்து விட்டார்.
ரபிஸி ரம்லி (பிகேஆர்- பாண்டான்), 2015 வரைக்குமான 1எம்டிபி-இன் கடன்கள் பற்றியும் அதன் கடன் நிலவரம்மீது பேங்க் நெகராவின் கணக்குத் தணிக்கை பற்றியும் விளக்கமான பதில் தேவை என்று கேட்டிருந்தார்.
அதற்கு நஜிப்பின் எழுத்துப்பூர்வமான பதில் ஒரு வரியில் அடங்கியிருந்தது: “2015 ஜனவரிவரை உள்ளூர் வங்கிகளிடம் 1எம்டிபி பட்டிருந்த கடன் ரிம5.037 பில்லியன் ரிங்கிட்”.
இந்த ஒரு-வரி பதில், எம்பேங்க் 1எம்டிபி-க்குக் கொடுத்த கடனில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக ஏற்கனவே தாம் சுமத்திய குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்ப்பதாக ரபிஸி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“எம்பேங்க் கொடுத்த கடனில் முறைகேடுகள் இல்லை என பேங்க் நெகாரா கூறியிருந்தால் அமைச்சர் அதைத் தெரிவிக்கத் தயங்கி இருக்க மாட்டாரே”, என்றாரவர்.
பேங்க் அராப் மலேசியன் தலைமைத்துவத்தின் மாற்றத்துக்கு இதுவே முக்கியக் காரணம் என்பது தெளிவாகிறது. அசோக்கின் வேண்டுதலுக்கு இணங்கியே இந்த மாற்றம் ஏற்பட்டது என்பது முழுப் பூசணிக்காயை மறைக்க முயற்சிக்கும் கலவாட்டுத் தனமே!!!
இப்படி அடிக்கடி “1MDB” பற்றி கேள்வி கேட்பதால் “ISIS” பயங்கரவாத அமைப்பு நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை தகவல் தந்துள்ளதால், இந்த “1MDB” பற்றி யாரும் கேள்வி கேட்ககூடாது என்று நமது நாட்டு “IGP” எச்சரிக்கை செய்தாலும் வியப்பொன்றும் இல்லை.