சுதந்திரத்துக்காக போராடும் வழக்குரைஞர்கள் அமைப்பின் செயல்முறை இயக்குனர் எரிக் பால்சன் இஸ்லாத்துக்கு எதிரி என்று வருணித்த பெர்சத்துவான் இஸ்லாம் மலேசியா(பெம்பேஎனா) அரசாங்கம் அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.
பால்சன் இஸ்லாத்தை இழிவுபடுத்தி வந்திருப்பதாக பெம்பேனா தலைவர் இப்ராகிம் முகம்மட் ஹசான் அல்-ஹாபிஸ் கூறினார்.
“அவர் அறியாதவராக இருந்தால் முதலில் கண்டிக்கப்பட்டபோதே நிறுத்திக் கொண்டிருப்பார்.
“ஆனால் அவர் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாக்கிம்), வெள்ளிக்கிழமை தொழுகையுரை, ஹுடுட் ஆகியவற்றைத் தொடர்ந்து குறைசொல்லி வந்திருக்கிறார். அதனால் பால்சன் இஸ்லாத்துக்கு-எதிரி என்ற முடிவுக்கு வருகிறேன்”, என்றவர் இஸ்மாவெப்பிடம் தெரிவித்தார்.
அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுத்து பால்சன் தேசநிந்தனைமிக்க வகையிலும் இனங்களைப் பிளவுபடுத்தக் கூடிய வகையிலும் பேசுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றாரவர்.
மற்ற சமய விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பெம்பேனா தலைவர் பால்சனுக்கு அறிவுறுத்தினார்.
“பால்சன் இஸ்லாமிய விவகாரங்களில் தலையிடக் கூடாது, சொல்லப்போனால் வேறு எந்தச் சமய விவகாரத்திலும் தலையிடக் கூடாது”, என்றார்.
உண்மையை எடுத்துச் சொன்னால் அவர் இஸ்லாத்திற்கு எதிரானவர் என்று முத்திரை குத்தினால் IS-காரர் வந்திருவாங்களே!. நல்ல நாடு நல்ல முல்லாக்கள்.
இந்த பெம்பேனா என்ன மயிரை பெம்பேனா செய்கிறான்? எல்லாம் தன்னுடைய வங்கி கணக்கு உயர சாக்கு. கம்மனாட்டிகள்.
என் ஜி ஒ , மண்டை மேலையும் ஒ ஒ ஒ தான்.
அட மட சாம்பிராணி எருமைகளே !
நீங்கள் மற்றவர்கள் சமய விவகாரத்தை கேலி செய்யும்போது இனிக்கிறது, மற்றவர்கள் உங்கள் சமய விவகாரத்தை பற்றி விமர்சனம் செய்தால் கசக்கிறது.
முதலில் நீங்கள் மற்ற சமய விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்தி கொள்ளுங்கடா எருமைகளே
இந்த மங்கு அறிவுரை சொல்லிவிட்டான். அடுத்த நடவடிக்கை என்ன ? இவனுக்கு ஈடான போலிஸ் தலைவரின் அடுத்த அறிக்கைக்கு காத்திருப்போம்….
நாடு முழுவதும் கோவில் உடைப்பு செய்தீர்களே ! அதுக்கு என்ன பொருள் ?
முதலில் உங்கள் முதுகில் உள்ள அழுக்கை போக்க வழித் தேடுங்கள் . ஊருக்குத்தான் உபதேசம் எனக்கு இல்லை என்ற கதைத்தான் !
ஜாக்கிமைக் குறை சொல்லுவதோ, தொழுகை உரையைக் குறை சொல்லுவதோ, ஹூடுட்டைக் குறை சொல்லுவதோ இஸ்லாமைக் குறை சொல்லுவதாகாது. அது குறை என்றால் அதனைச் சரி செய்வது உங்கள் பொறுப்பு. நீங்கள் செய்கின்ற தவறுகளை இஸ்லாம் என்று சொல்லி தப்பிக்கப் பார்க்காதீர்கள். பதில் சொல்ல முடியவில்ல என்றால் உடனே இஸ்லாத்துக்கு எதிரி என்று முத்திரைக் குத்தாதீர்கள். நீங்கள் குற்றம் சொல்லுபவர் உங்களைப் போல ‘அரைகுறை’ அல்லர்!