பிரதமரும் நிதி அமைச்சருமான நஜிப் அப்துல் ரசாக், 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் உள்ளூர் வங்கிகளிடம் வாங்கியுள்ள கடன்கள் பற்றி நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு விரிவாக பதிலளிக்க மறுத்து விட்டார்.
ரபிஸி ரம்லி (பிகேஆர்- பாண்டான்), 2015 வரைக்குமான 1எம்டிபி-இன் கடன்கள் பற்றியும் அதன் கடன் நிலவரம்மீது பேங்க் நெகராவின் கணக்குத் தணிக்கை பற்றியும் விளக்கமான பதில் தேவை என்று கேட்டிருந்தார்.
அதற்கு நஜிப்பின் எழுத்துப்பூர்வமான பதில் ஒரு வரியில் அடங்கியிருந்தது: “2015 ஜனவரிவரை உள்ளூர் வங்கிகளிடம் 1எம்டிபி பட்டிருந்த கடன் ரிம5.037 பில்லியன் ரிங்கிட்”.
இந்த ஒரு-வரி பதில், எம்பேங்க் 1எம்டிபி-க்குக் கொடுத்த கடனில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக ஏற்கனவே தாம் சுமத்திய குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்ப்பதாக ரபிஸி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“எம்பேங்க் கொடுத்த கடனில் முறைகேடுகள் இல்லை என பேங்க் நெகாரா கூறியிருந்தால் அமைச்சர் அதைத் தெரிவிக்கத் தயங்கி இருக்க மாட்டாரே”, என்றாரவர்.
ஒரு வரிக்கு மேலே சொல்ல அவரிடம் சரக்கு இல்லை போலும். அவரு என்ன வச்சிக்கிட்டு சொல்ல மாட்டேன்னு வஞ்சனையா பண்றாரு?.
திக்குமுக்காடும் வேளையில் அடுத்த வரி எப்படி வெளிவரும்????
“BR1M” என்று மக்களுக்கு வழங்கும் லஞ்ச பணத்திற்கு தொலைகாட்சியில் வாய் கிழிய விளக்கம் ஆனால் “1MDB” ஊழலுக்கு (முறைகேடு என்றாலே ஊழல் என்றுதானே அர்த்தம்) நாடாளுமன்றத்தில் ஒரு வரியில் பதிலா ?
“BR1M” என்ற லஞ்சம் வரும் முன்னால் ; “1MDB” என்ற ஊழல் வரும் பின்னால். இதுவும் இந்நாள் பிரதமரின் சாதனைகளுள் ஒன்று.