மன்னிப்பு வாரியம் அன்வார் குடும்பத்தின் மனுமீது முடிவு செய்து விட்டது

pardonஅன்வார்  இப்ராகிமுக்கு  மன்னிக்க  வேண்டி  அவரின்  குடும்பத்தார்  செய்து  கொண்டிருந்த  மனுமீது மன்னிப்பு  வாரியம்  முடிவெடுத்து விட்டது. ஆனால்,  முடிவு  எதிரணித்  தலைவருக்குச்  சாதகமாக இருக்காது  என்றே  தோன்றுகிறது.

அன்வாரின்  வழக்குரைஞர்  என்.சுரேந்திரனைக் கேட்டதற்கு முடிவு  என்னவென்பதைத்  தெரிவிக்க  அவர்  விரும்பவில்லை. கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம்  புதன்கிழமை  அதை  உறுதிப்படுத்தும்வரை  காத்திருக்கும்படி  கூறினார்.

கூட்டரசு அரசாங்கத்தின்  மூத்த  வழக்குரைஞர்  அமர்ஜிட்டும்   மன்னிப்பு  மனுமீது  முடிவெடுக்கப்பட்டு  விட்டதை உறுதிப்படுத்தினார்.

அதன்  தோடர்பில்  பிரதமர்  துறை  சட்டப்  பிரிவின்  தலைமை  இயக்குனர் ஒரு  பிரமாண பத்திரத்தை  விண்ணப்பத்தாரர்களுக்கு  அனுப்பி  விட்டார்  என்றும்  கூறினார்.

இருக்கும்  நிலையைப் பார்க்கையில் அன்வாரின் மன்னிப்பு  கோரும்  மனு  நிராகரிக்கப்படும்  என்றே   தோன்றுகிறது. அது  நிராகரிக்கப்பட்டால்  அவர்  குதப்புணர்ச்சிக்  குற்றத்துக்காக  ஐந்தாண்டுச்  சிறைத்  தண்டனையை  அனுபவிக்க  வேண்டியிருக்கும்.

அத்துடன், அவருடைய  பெர்மாத்தாங்  பாவ்  நாடாளுமன்றத்  தொகுதியும்  காலியானதாக  அறிவிக்கப்படும்.