14-வயது தியாக்குருடினை மதமாற்றம் செய்ய முயன்று அம்மாணவன் பராகுவாட் அருந்திய வழக்கு இன்னும் தீர்க்கப்படாத நிலையில் சரவாக்கிலும் இதேபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில் 13-வயது இபான் பெண்ணான சப்ரினா அனாக் ங்கும்பாங்- கை ஓர் ஆசிரியரும் மற்றவர்களும் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ய முயன்றார்களாம்.
அது பற்றி அப்பெண் மார்ச் 25-இல் லூத்தோங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
அப்புகாரில் அவர், மார்ச் 14-இல், அவரையும் இதர ஐந்து மாணவர்களையும் எஸ்எம்கே லூத்தோங் ஆசிரியர் ஒருவர் மீரியில் உள்ள கோலா பராமில் சம்லிங் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு கூட்டிச் சென்றதாகக் கூறியுள்ளார்.
அவ்வீட்டில் மாணவர்களுக்கு முஸ்லிம் முறைப்படி தொழுகை செய்வது கற்றுக்கொடுக்கப்பட்டதாம். அதன்பின்னர் ஒவ்வொருவருக்கும் ரிம200 கொடுத்தார்களாம்.
சப்ரினாவிடம் மார்ச் 16-இல் அவர் இஸ்லாமிய சமயத் துறைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டதாம்.
உண்மை கண்டுபிடிக்கப்பட்டால் என்ன, ஆசிரியர் வேறொரு பள்ளிக்கு பணி மாற்றம் செய்யப்படுவார். அவ்வளவு தானே??? இம்மாதிரியான ஆசிரியர்களை தேய்ந்த செருப்பால் அடித்தால் கூட திருந்தமாட்டார்கள்!!!!
சிங்கப்பூர் அடைந்த முன்னெற்றம் அந்நாட்டின் இன மத ஒற்றுமையே ஓர் அடையாளம். மலேசிய நாட்டில் இந்த நிலை உருவானால் நிச்சயம் முன்னெற்றம் ஏற்படலாம்.
இங்கு ஊழல் இல்லா திறமை உள்ள தலைவர்களால் முன் நடத்தப்படுகிறது. சிங்கபூர் பணக்கார நாடுகளில் ஒன்று ஆனால் இங்கு பிரதம்னுக்காக பிரத்தியேக விமான கிடையாது. மலேசியாவில் விமானப்படையின் நிதியிலிருந்து இவன்களின் ஊர் சுற்றலுக்கு எவ்வளவு நிதி அழிக்கபடுகிறது?
மற்றவர்களை மதமாற்றம் செய்வதால் சொர்கத்துக்கு போகலாம் என்ற என்னத்தை
இவர்கள் முதலில் கைவிடவேண்டும் . எந்த மதத்தில் இந்த முட்டாள்தனத்தை யார் போதிக்கிறார்கள்?