பிகேஆர், சனிக்கிழமை கோலாலும்பூரில் நடைபெறும் கித்தா லவான் பேரணியில் கட்சி உறுப்பினர்கள் பெருமளவில் கலந்துகொள்வதை ஊக்குவிக்க வேண்டும் எனக் கட்சித் தலைவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
என்ஜிஓ-களால் ஏற்பாடு செய்யப்படும் அப்பேரணியை வெற்றிபெறச் செய்ய பிகேஆர் முழுக் கடப்பாடு கொண்டிருப்பதாக அதன் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“மலேசியாமீது அன்பு கொண்ட மலேசியர்கள் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கவும் கூட்டரசு அரசாங்கத்தின் கொடூர வழிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் திரண்டு வர வேண்டும் என பிகேஆர் விரும்புகிறது.
“அதிகாரிகள் அமைதியாக ஒன்றுகூடும் நம் உரிமைகளுக்கு இடையூறாக இருக்க மாட்டார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்”, என்றாரவர்.
மக்கள் உரிமைக்குரல் ஓங்க வேண்டும். மக்கள் நலன் பெருக வேண்டும் உண்மை ஜனநாயகம் மலர வேண்டும் . அராஜகம் ஒழிய வேண்டும். காட்டுமிராண்டித்தனம் அழிய வேண்டும். இதுவே மலேசியா மக்களின் விருப்பம்.
இக்கூட்டத்திற்கு மக்கள் வரக்கூடாது என்று பயமுறுத்துகிறது போலீஸ். அதனால்தானோ என்னவோ முன்கூட்டியே PKR பொதுச்செயலாளர் ரபிசி யை கைது செய்துள்ளது. போலீஸ் துறைக்கு ஏழரை சனி பிடித்துள்ளது.
வேலை வெட்டி இருந்தால் போய் பாருங்கடா.