தி எட்ஜ் செய்திதாளின் பதிப்பாளர் ஹோ கேய் தாட்டும் மலேசியன் இன்சைடர் (டிஎம்ஐ) தலைமை செயல் அதிகாரி ஜகபர் சாதிக்கும் இன்று டாங் வாங்கி போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக சென்றபோது கைது செய்யப்பட்டனர்.
ஆட்சியாளர் மாநாடு பற்றித் தப்பான செய்தியை வெளியிட்டதற்காக டிஎம்ஐ-இன் மூத்த செய்தியாசிரியர்கள் மூவர்- லயோனல் மொராய்ஸ், அமின் ஷா இஸ்கண்டர், சுல்கிப்ளி சூலோங்- நேற்று கைது செய்யப்பட்டதை அடுத்து இன்று இவ்விருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
“நாங்கள் கைது செய்யப்பட்டது ஹுடுட் பற்றிய ஒரு செய்திக்காக மட்டுமல்ல என்று தோன்றுகிறது”, என ஜகபர், கைது செய்யப்படுவதற்குமுன் டிஎம்ஐ-இடம் கூறினார்.
“த மலேசியன் இன்சைடர் அச்சமோ பாரபட்சமோ இன்றி தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வரும். எப்போதும்போலவே நடந்து கொள்வோம்”, என்றாரவர்.
தி எட்ஜ்-தான் டிஎம்ஐ செய்தித்தளத்தை நடத்தி வருகிறது.
நம் நாட்டில் பேச்சுரிமைக்கு சுதந்திரமில்லை. கூட்டம் போட்டு மக்களுக்கு தகவல் சொல்ல சுதந்திரமில்லை. எழுத்துரிமைக்கு சுதந்திரமில்லை. ச்சே ச்சே! வெட்கக்கேடு! நல்ல காலம்! ஒரு விஷயத்திற்கு சுதந்திரம் உள்ளது. ஆம்! அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கு!