தப்பான செய்தியைப் போட்டதற்காக த மலேசியன் இன்சைடர் செய்தியாசிரியர்களும் பதிப்பாளரும் கைது செய்யப்பட்டிருப்பதை மலேசியாகினி கடுமையாகக் கண்டித்துள்ளது.
இது ஊடகச் சுதந்திரம்மீது மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான அதிரடித் தாக்குதல் என்றும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அளித்த உருமாற்ற வாக்குறுதிகள் எல்லாம் காற்றோடு கரைந்து போய்விட்டன என்றும் அது கூறிற்று.
ஊடகச் சுதந்திரம் என்பது செய்தி நிறுவனங்கள் தவறான செய்தி போடுவதற்கான அனுமதி அல்ல. அதற்காக, செய்தியாசிரியர்களையும் செய்தியாளர்களையும் கைது செய்வதும் நியாமில்லை.
இப்படிப்பட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமலேயே போலீசார் விசாரணையை எளிதாக நடத்தியிருக்க முடியும் என்று அது கூறிற்று.
ஒருவரைத் தாக்கினால், அது அனைவரையும் தாக்கியதாகும்
தோற்றுவிக்கப்பட்ட நாளிலிருந்து மலேசியாகினியும் பல்வேறு தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. அதன் அலுவலகத்தை போலீசாரும் மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையமும் அதிரடிச் சோதணைக்கு உட்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு, அதன் செய்தியாளர்களில் ஒருவர் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
என்ன நடந்த போதிலும், நாங்கள் உறுதியுடன் இருந்தோம். மலேசியர்கள் எங்களுக்கு மனதார ஆதரவு வழங்கினர். அதற்கு நாங்கள் அவர்களுக்கு நன்றி கூறுகிறோம்.
அதைப் போலவே, மலேசியர்களும், ஊடகத்தினரும் த மலேசியா இன்சைடருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இக்கட்டான நிலையில் அதற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று மலேசியாகினி கூறுகிறது.
எங்களில் ஒருவர் மீது நடத்தப்படும் தாக்குதல் நாங்கள் அனைவரும் தாக்கப்பட்டதாகும் என்பதை மலேசியாகினி வலியுறுத்தியது.
செய்தியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதிகாரத்திலிருப்பவர்களுக்கு எழுதுகோல் வாளைவிட வல்லமையானது என்ற தெள்ளத் தெளிவான செய்தியை அனுப்ப வேண்டிய நேரம் இது என்று மலேசியாகினி மேலும் கூறிற்று.
அவர்கள் ஊடகங்களை மட்டுமா தாக்குகிறார்கள்? மக்களையும் தான் தாக்குகிறார்கள்! இப்படித் தாக்குவதற்கு அவர்கள் வைத்திருக்கும் ஒரே ஆயுதம் “இஸ்லாம்”! சமயம் என்று வரும் போது நீதி, நேர்மை எல்லாம் தவிடு பொடியாகிவிடுகிறது!
இந்த அடக்குமுறை வரும் தேர்தல் வரை தொடரும்– இன்னொரு தேர்தல் வந்தால். இதையே சாக்காக வைத்து தேர்தலே இல்லாமல் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. காரணம் அதிகாரத்திலும் பதவியில் இருந்தும் கொள்ளை அடிக்க இதை விட வேறு என்ன தேவை? அதிலும் அம்னோ குண்டர்கள் அவன்களின் கைவரிசை காட்ட நல்ல சமயம்.
தேசநிந்தனை சட்டத்திற்கு வரைமுறை இல்லாமல் போய்ற்று அடக்கு முறையை கையாலும் ஆட்சியாளர்கள்!
ஊடகங்கள் தப்பான செய்தியை பிரசுரித்துவிட்டால், அச்செய்தி சம்பந்தப்பட்டவர்கள், அல்லது அச்செய்தியால் பாதிக்கப்பட்டவர்கள்,குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்கச் சொல்வர், இதுதான் இதுநாள்வரை நடைமுறையில் உள்ளது. ஆனால், இப்போது கைது வரை போகிறதே! நாட்டின் சீரழிவு வெகுதூரத்தில் இல்லை. .
காவல்துறையினர் வெறுமனே வாங்கும் சம்பளத்திற்கும் / கிம்பளத்திற்க்கும் எதாவது வேலை கொடுக்க வேண்டுமே என்று அரசாங்கம் இப்படியொரு யுக்தியை கையாள்கிறது.
அதற்கு தகுந்தாற்போல் காவல்துறையினரும் “வத்தலோ தொத்தொலோ பொத்தலே பிரதானம்” என்பதுபோல் யார் என்ன பேசினாலும் “தேசநிந்தனை” கைது என்ற பெயரில் தினமும் நமது நாட்டு மக்களுக்காக நகைச்சுவை காட்சிகளை அரங்கேற்றுகிறார்கள்.
மலேசிய நாட்டின் “தேசநிந்தனை கைது” பற்றி தொலைகாட்சியில் காணும் வெளிநாட்டினர் மற்றும் மலேசியாவுக்கு வருகை புரிந்திருக்கும் சுற்றுபயணிகள் மலேசிய காவல்துறையை கண்டாலே “சிரிப்பு போலிஸ்” என்று நக்கலாகவும்/கிண்டலாகவும் சிரித்து கொள்கிறார்கள்.
தேசநிந்தனை சட்டம் லஞ்சம் வாங்கும்
போலீசாருக்கு எதிராக பாய்ந்தால் சிறையில் இடமிருக்காது.நாடு
சுத்தமாகும்!