பாஸ், ஹுடுட் சட்டத்தில் பிடிவாதமாக இருப்பதன் காரணமாக அடுத்த பொதுத் தேர்தலில் துடைத்தொழிக்கப்படலாம் என டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் எச்சரிக்கிறார்.
வடக்கத்தி மாநிலங்கள் சிலவற்றில் வேண்டுமானால் அது பேர் போட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால், அதன் கோட்டையாக திகழும் கிளந்தானில்கூட அக்கட்சி ஆட்சியை இழக்க நேரலாம் என்று லிம் கூறினார்.
ஹுடுட்டின் காரணமாக பக்கத்தான் ரக்யாட் உடைவது மூன்று உறுப்புக் கட்சிகளுக்குமே பாதிப்பைக் கொண்டுவரும் என்று கேலாங் பாத்தா எம்பியான லிம் சொன்னார். ஆனால், பாஸ்தான் அதிகமாக பாதிக்கப்படும்.
“30 விழுக்காடு முஸ்லிம்-அல்லாதார் வாக்குகளை இழப்பதால் பாஸ், 2013-இல் வெற்றிபெற்ற ஏழு நாடாளுமன்ற இடங்களையும் 29 சட்டமன்ற இடங்களையும் இழக்கும்.
“ஜோகூர், பேராக், மலாக்கா ஆகியவற்றில் அது முற்றாக துடைத்தொழிக்கப்படும். சிலாங்கூர், பகாங், கெடா ஆகியவற்றில் கிட்டதட்ட இல்லாமல் போய்விடும்”, என்று லிம் அறிக்கை ஒன்றில் கூறினார்.
100.சதவீதம் உண்மை.சென்ற தேர்தலில் பாஸ் கட்சிக்கு போட்ட ஒரூ ஒட்டுக்காக வருந்துகிறேன்!
14 வது தேர்தல் வரும் போது பாஸ், ஹூடுட்டை முற்றிலும் துடைத்து ஒழித்துவிடும்! இதெல்லாம் அரசியல்வாதிகளுக்குக் கை வந்த கலை!
ஐயா! லிம் கிட சியாங், உங்கள் கட்சியின் நிலை கூறமாட்டீர்களா? பாஸ் கட்சி உடனான உறவை டி.எ.பி.முறித்துக்கொள்ளுமானால், தற்போதைய டி.எ.பி.யின் 37 நாடாளுமன்ற தொகுதிகளில் 15 நாற்காலிகளை இழக்கக்கூடும் [உங்களது கேலாங் பாத்தா உட்பட]. சட்டமன்றங்களில் சிலாங்கூரின் 13ல் 7ஐ இழப்பீர்கள். பகாங்கில் தற்போதைய 7ல் 5ஐ மூடைகட்டுவீர்கள். கெடாவில் உங்களுக்கு ஒன்றும் தேறாது. பாஸ் கட்சியுடன் உறவு இருந்தபோதே தெலுக் இந்தான் நாடாளுமன்றத்திற்கு சங்கு ஊதிவிட்டீர்கள் . உங்கள் முதுகிலும் நிறையவே அழுக்கு உள்ளது. கவனம். முதுகு அரிக்கிறதே என்பதற்காக கொள்ளிக்கட்டையைக் கொண்டு முதுகை சொறியாதீர்கள். [குறிப்பு; டி.எ.பி.யின் லட்சணங்களை வெளிப்படுத்துவதால், பாஸ் கட்சியின் ஹுடுட்டை ஆதரிப்பதாக அர்த்தமாகாது]
உண்மைதான்.14 ஆவது பொதுத் தேர்தல் வருவதற்குள் கிளந்தாநிளிருந்து பெரும்பாலான மக்கள் வெளியேறி வேறு மாநிலத்துக்கு குடி பெயர்ந்துவிடுவார்கள்.தீபகற்ப மலேசியாவில் மற்ற மாநிலங்களில் அந்த கட்சி துடைத்தொழிகப் படுவது முற்றிலும் உண்மை.மக்கள் கூட்டணியிலிருந்து பாஸ் கட்சியை கழுட்டிவிடுவது DAP கட்சிக்கு எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.PKR றும் இன்னும் பலத்துடன் செயல்படும்.
அரசனை நம்பி புருஷனை விட்ட கதை மாதிரி .. அழும் கட்சி திருத்த கூட்டணி கட்சி தேடினால், பாஸ் அதில் மத வெறியோடு ஆடுகிறது .. மலேசியா திருநாடு மொட்டை காண்பது உறுதி.