த மலேசியன் இன்சைடர் (டிஎம்ஐ) செய்தித்தளத்தின் செய்தியாசிரியர்களை விசாரணைக்காக தடுத்து வைக்க நீதிமன்றத்தின் உத்தரவைப் பெறும் போலீசின் முயற்சி பலிக்கவில்லை.
டிஎம்ஐ நிர்வாக ஆசிரியர் லயோனல் மொராய்ஸ், மூத்த செய்தியாளர்கள் சுல்கிப்ளி சுலோங், அமின் ஷா இஸ்கண்டர் ஆகிய மூவரும் இன்றிரவு ஏழு மணிக்குள் விடுவிக்கப்படுவர் என்று வழக்குரைஞர் ஷியாரெட்ஸான் ஜொஹான் கூறினார்.
“லயோனல் மொராய்ஸ், சுல்கிப்ளி சுலோங், அமின் ஷா இஸ்கண்டர் ஆகியோரைத் தடுத்து வைப்பதற்காக செய்துகொள்ளப்பட்ட மனுவை மெஜிஸ்திரேட் (முகம்மட்) நஸ்ரி ஒம்ரான் தள்ளுபடி செய்தார்”, என ஷியாரெஸான் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
ஒரு வழி பலிக்கவில்லை என்றால் இன்னொரு வழியில் பலிக்க வைப்பார்கள்! இது தாண்டா போலிஸ்!
நீதி இந்நாட்டில் இன்னும் சாக வில்லை
இதெல்லாம் பெரிய நாடகம்