அம்னோ மூத்த அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் ஹுடுட்டால் பக்கத்தான் ரக்யாட் உடைந்து போவதைக் காண ஆவலாக உள்ளார்.
“ஹுடுட் விவகாரத்தால் பக்கத்தான் உடையும் என்றால் அப்படியே நடக்கட்டும்”, என்றவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஹுடுட் பற்றி விவாதிக்கப்படவில்லை என்பதையும் நஸ்ரி தெரிவித்தார்.
கிளந்தானில் ஹுடுட்டை நடைமுறைப்படுத்த பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் தனி உறுப்பினர் சட்டவரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போது அதன்மீது எப்படி வாக்களிப்பது என்று பிஎன் இன்னும் முடிவு செய்யவில்லை.
பக்கத்தானை உடைப்பதில் பாரிசானை விட பாஸ் கட்சிக்காரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். கடந்த பொதுத்தேர்தலில் கோத்தா டாமன்சாரா தொகுதியில் பாஸ் உறுப்பினரை போட்டி வேட்பாளராக நிறுத்தி பக்கத்தான் சார்பில் போட்டியிட்ட பிஎஸ்எம் வேட்பாளரை தோற்கடித்து பாரிசானுக்கு வெற்றியைத் தேடித் தந்தார்கள். மந்திரி புசார் காலிட் விவகாரத்தில் பக்கத்தானின் நிலைப்பாட்டை மீறி நான்கு ஆட்சிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு ஆட்சி நடத்தியதோடு ஜசெக மற்றும் பிகேஆர் உறுப்பினர்களை காலிட் பதவி நீக்கம் செய்வதற்கும் துணை போனார்கள். இப்படி பக்கதானில் இருந்து கொண்டே கால காலமாக துரோகம் செய்யும் வேலையை தெளிவாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். வேட்டியின் கிழந்த கரை மாதிரி பாஸ் கட்சியில் ஓரமாக ஒட்டிக் கொண்டிருக்கும் நமது இனத்தைச் சேர்ந்த சிலதுகளும் அந்த கட்சிக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கின்றன.
எங்களுக்குக் கூடத் தான் ஜி.எஸ்.டி. யால் பாரிசான் நொறுங்கிப் போகும் என எதிர்பார்க்கிறோம்! நடப்பது நடக்கட்டும்!
PAS போன்ற ஈன ஜென்மங்களை நம்பவே முடியாது–நான் எவ்வளவோ முறை சொல்லிவிட்டேன்.
PAS இல் உள்ளா எல்லோரும் சமயத்தை பயன் படுத்தும் சந்தர்ப்பவாதிகள்அல்ல. ஹாடி போல ஒரு சில தலைவர்கள் தங்களின் இயலாமையை மறைக்க சமயத்தை கையில் எடுத்துள்ளனர்,
“Ooru rendu patta koothadikku kondattam”
அது இருந்தால்தானே உடைவதற்கு அமைச்சரே…அவர்களின் ஒற்றுமை தெருவில் மட்டும் தான்..அதாவது தெரு ஆர்பாட்டம் …