ஒரு வாரத்துக்குமுன் பொருள், சேவை வரிமீது 106 கேள்விகளுடன் கூட்டரசுப் பிரதேச சுங்கத் துறையை முற்றுகையிட்டபோது கைதான ஜிஎஸ்டி-எதிர்ப்பாளர்களில் சுமார் பன்னிரண்டு பேர் இன்று திரும்பவும் அங்கு சென்றார்கள்.
ஆனால், ஒரு மாற்றம். இப்போது அவர்கள் ஜிஎஸ்டி-க்கு எதிர்ப்புத் தெரிவிக்க அங்கு செல்லவில்லை. தங்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்ததற்கு நன்றி தெரிவிக்கவே சென்றார்கள். ஆனாலும், 106 கேள்விகளில் 17-க்குப் பதில் அளிக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அமைதி நோக்கில் வந்ததன் அடையாளமாக அவர்கள் கைகளில் மலர்க் கொத்துகளை ஏந்தி இருந்தனர்.
போலீஸ் படை ஒன்று அருகில் நின்று அவர்களின் நடவடிக்கையைக் கண்காணித்துக் கொண்டிருந்தது.
சரியான அடி !!! மக்கள் ஒன்டுறம் மடையர்கள் அல்ல!!!!
பதில் தெரியாட்டி என்ன செய்யறது.சிபார்சுல வேலைக்கு வந்தாச்சி .
நானும் காலை 11 மணி அளவில் அங்கு சென்றேன் ! மலர் கொத்து கொடுக்க வந்தவர்களை 50 fru போலிஸ் பாதுகாப்பு கொடுத்தது ! சாலை அடைக்கப்பட்டது ,கெளானா ஜெயா போலிஸ் நிலைய வளாகம் பெரிய போலிஸ் வண்டிகள் வருசையாக நிறுத்தப்படிருந்தது ,இன்று காலை உணவுக்கு 20 சென் gst கொடுத்தேன் !
அதிகாரத்தில் உள்ள இந்த மூடர்களுக்கு பதில் தெரிய தேவை இல்லை — அதெல்லாம் தகுதி திறனாளிகளுக்கு — அரைவேக்காடுகளுக்கு அல்ல.