கித்தா லவான், தொழிலாளர் தினமான மே முதல் நாளில் பொருள், சேவை வரிக்கு எதிரான பேரணி ஒன்றை ஏற்பாடு செய்கிறது.
இது, அவ்வமைப்பு, பிப்ரவரி 10-இல் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் சிறையிடப்பட்டதிலிருந்து நடத்தும் மூன்றாவது பேரணியாகும்.
“அரசியல்வாதிகள், கல்விமான்கள், வழக்குரைஞர்கள், சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள் என 120-க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
”ஆனால், இளைஞர்கள் அஞ்சவில்லை, இப்போதைய நிலை மாறும் என்ற நம்பிக்கையை மக்களுக்குக் கொடுப்பதற்காக அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற பேரணியை நடத்திக் கொண்டிருப்பார்கள்”, என கித்தா லவான் செயலகம் விடுத்த அறிக்கை ஒன்று கூறிற்று.
மக்கள் வெறுமனே குறை கூறிக் கொண்டிருக்காமல் “எதிர்த்துப் போராட” மே முதல் நாள் கித்தா லவான் பேரணியில் கலந்துகொள்ள கோலாலும்பூர் வர வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்! Bersih விற்கும் Hindraf பிற்கும் கூடிய கூட்டம் இதற்கும் கூடவேண்டும் என விரும்புகிறேன். மீண்டும் சொல்கிறேன்! கடினம் என்பதால் ஒரு காரியத்தை முயற்சிக்காமலேயே விட்டுவிடுவது சோம்பேறித்தனம். அச்சத்தினால் ஒரு காரியத்தை நெருங்காமல் இருப்பது கோழைத்தனம். வருவது வரட்டும், காரியத்தில் இறங்குவோம் என முயற்சிப்பதே வீரத்தனம். Try, never say die. Nothing is impossible .
எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான் ஆட்சி மாற்றம் மட்டுமே தீர்வாகும் !
அடப்பாவிகளா. அன்வர் மாமா வெளியில் வரும் வரை போராட்டமா…அவர் குடும்பத்துக்காக நிறைய தியாகிகள் உள்ளே செல்லவேண்டி இருக்கிறது…
யார் என்ன சொன்னாலும் இந்த சாந்திக்கு சூடு சொரணை இல்லை போலும்
lozeni நீங்கள் சொன்னதுதான் சரி..ஆட்சி மாற்றம் ஒன்றே நிறந்தர தீர்வாகும்
அப்பு ஆட்சி மற்றம் வரட்டும்…அனால் இந்த மக்கள் கூட்டனி வந்தால் இருப்பதும் குட்டுசுவர் ஆகிவிடும் அப்பு…மூன்றாவது அணி வரணும் ..அதில் நம் இந்தியர்களை கவனிக்கப்படவேண்டும்…மக்கள் கூட்டனி தெருவில் மட்டும்தான் ஒற்றுமை…கட்சியிலும் ஆட்சி அமைப்பதிலும் இன்னும் அவர்கள் தயார் ஆகவில்லை…இது அன்வார் மாமா குடும்ப அரசியலும், PAS மற்றும் DAP இன அரசியலும் தான் உள்ளது…