பிரதமர் நஜிப் இன்று பொருள் மற்றும் சேவைகள் வரியை (ஜிஎஸ்டி) தற்காத்து பேசியதோடு அந்த வரியை “ஹலால்” என்று பிரகடனம் செய்தார்.
அந்த வரி இன்று முதல் அமலாக்கம் காண்கிறது.
இன்று உலக ஹலால் உச்சநிலை மாநாட்டில் பேசிய பிரதமர் நஜிப், “தேசிய ஃபாட்வா மன்றம் ஜிஎஸ்டி உண்மையில் ஹலால்” என்று அறிவித்திருக்கிறது என்று கூறினார்.
நீ அதை பயன் படுத்தும் முறை நிச்சயம் 100% ஹராமாக இருக்கும்.
கடவுளே….!
GST பயன்படுத்தும் நாடுகளில் வியட்நாமும் ஒன்று. பலமுறைகள் வியட்நாமிற்கு சென்று வந்துள்ளேன். அங்கே 1/2 [அரை] பாட்டில் ‘நாய்’ பீர், [Guinness Stout ] 15,000 டாங் [Dong]. அதாவது, நம் நாட்டின் நாணயம் இரண்டு வெள்ளி ஐம்பது [2.50] காசுதான். அனால், நம் நாட்டில் GST அமுலில் இல்லாத காலத்திலேயே, இதன் விலை, கழுத்திலே கத்தி.
நாசமா போச்சி
நஜிப் பிறசவித்த.பிள்ளை ஜிஎஸ்.டிக்குஹாலால் என்று பேரு
சூட்டி மகிழ்ந்து கொள்கிறார்!
இதில் மது ,சூதாட்ட வழி வசூலிக்கும் வரியும் ஹலாளில் அடங்குமா ???
நீங்க ரொம்ப நல்ல இருப்பிங்க அய்யா…….
உங்கள வாழ்த்த வார்தையே இல்லை……..
“நாய் ச்சாப் கின்னஸ் ச்டௌட் குடிக்கார நா..களுக்கு நல்லது” – just kidding Mr Singam.
அண்டை நாடுகளில் விதிக்கப்படும் GST வரியோடு ஒப்பிடும்போது நமது நாட்டில் GST வரி குறைவு என்று கூறும் எருமைகள், அண்டை நாடுகளில் கார்களின் விலை நமது நாட்டை விட மிக மிக குறைவாக இருப்பதை மட்டும் குறிப்பிட மறந்து விடுகின்றன நமது நாட்டு எருமைகள்.
நாட்டை கொள்ளையடித்து நாடு திவாலாகி கொண்டிருக்கும் இவ்வேளையில், GST வரியை திணித்து மக்களின் தாலியை அறுத்து நாட்டை காப்பாற்ற போகிறார்களாம் எருமைகள்.
இப்படிப்பட்ட மட எருமைகளை நினைத்தால்,
” நாங்களே எங்கள் நாட்டை ஆண்டுக்கிறோம் என்று வெள்ளைகாரனிடமிருந்து நாட்டை வாங்கி, இவங்களே கொள்ளை அடிக்கிறாங்க, கொலை செய்யுறாங்க …..” என்று ஒரு தமிழ் படத்தில் கவுண்டமணி பேசும் வசனம்தான் ஞாபகம் வருகிறது.
இதிலிருந்து என்ன தெரிகிறது? மக்களை மாக்கள் ஆக்கி அடக்குமுறையில் சிந்திக்க கூடாதென்று தலையில் விமானம் ஒட்டி கொண்டிருக்கின்றனர்– அதிலும் பிரித்து ஆண்டு சுகம் கண்டு இப்போது ஜால்றாக்களுடன் கொட்டம் அடிக்கின்றனர்.எப்போது விடிவு? ஆங்கில பள்ளிகளை தேசியம் என்ற போர்வையில் அழித்தொழித்து இன வாதத்தையும் மத வாதத்தையும் தேசியமயமாக்கி கொள்ளை அடித்துகொண்டிருக்கின்றனர்.
இன்று வீட்டு ‘செலவு சாமான்’ வாங்கப் போனேன். பருப்பு, மிளகாய், தேநீர் பால் மாவு, ஊறுகாய் என்று எல்லா பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி போட்டார்கள். பலர் கடைக்காரர்களிடம் மல்லுக்கு நின்றார்கள். அப்போது நான் அவர்களுக்கு ஒரு சமாதான்ம் சொன்னேன். ‘இன்னும் ஒரு வருடம் பொறுத்திருங்கள்’. ‘அப்புறம்?’ என்றார் ஒருவர். ஒன்று இது நமக்கெல்லாம் பழகிவிடும்’ ‘இல்லாட்டி?’ ‘இல்லாட்டி அதற்கடுத்த வருடம் தேர்தல் வருமில்ல, அப்ப காட்டுங்க உங்க வீரத்த’ என்றேன்.
அது சரி. நான் மேலே சொன்ன பொருள்களுக்கெல்லாம் ஏற்கனவே 10% எஸ்.எஸ்.டி வரி வசூலித்தார்கள். அப்பன்னா இப்ப 6% ஜி.எஸ்.டி வரி. அப்பன்னா 4% வரி கொறஞ்சிருக்கணுமில்ல.. அப்பன்னா ஆப்பு வெச்சுட்டாரா நஜிப்?
அடாடா! தேசிய பாட்வா மன்றம் இந்த வேலையைக் கூட செய்கிறதா! ‘தண்ணி’ அடிப்பவன் ஜிஎஸ்டி கட்டுவதால் இனி ‘தண்ணி’ அடித்துவிட்டுக் கலாட்டா செய்தால் குற்றமாகாதோ?