மகாதிர்: அல்டான்துன்யாவைக் கொலை செய்யச் சொன்னது யார்?

drஅல்டான்துன்யாவைக்  கொலை செய்ய  உத்தரவிட்டது  யார்  என்பது  மக்களுக்கு  விளங்காத  மர்மமாக  உள்ளது  என்கிறார்  முன்னாள்  பிரதமர்  மகாதிர்  முகம்மட்.

போலீஸ்  அதிரடிப்  படையின்  முன்னாள் வீரரான  சிருல்  அஸ்ஹாரின்  கூற்றை  விசாரிக்க  வேண்டும். அப்போதுதான்  கோரமான  அக்கொலைக்குப்  பின்னணியில்  இருந்தது  யார்  என்பது  தெரியவரும்  என்பதை  அவர்  வலியுறுத்தினார்.

“அக்கூற்றை (பிரதமர்) நஜிப்(அப்துல் ரசாக்)  ‘அபத்தம்’  என்று  கூறி  நிராகரித்ததைத்  தவிர  அதன்மீது  எந்த  விசாரணையும்  நடத்தப்படவில்லை.

“இது  மனித  உயிர்  சம்பந்தப்பட்டது. உத்தரவைப்  பின்பற்றியதற்காக  சிருல்  சாவது  கொடூரமாகும்”, என்று  மகாதிர் அவரது  வலைப்பதிவில்  கூறினார்.

சிருல் மலேசியாகினிக்கு  வழங்கிய  நேர்காணலை வைத்துத்தான்  மகாதிர்  இவ்வாறு  கூறினார்.

சிருல், அவருக்கு இடப்பட்ட  உத்தரவுப்படி  நடந்து கொண்டதாகவும்  மங்கோலிய  பெண்ணான  அல்டான்துன்யாவைக்  கொலை  செய்யும்  நோக்கம்  கொண்டவர்கள் சுதந்திரமாக  நடமாடுகிறார்கள்  என்றும்  அந்நேர்காணலில் கூறியிருந்தார்.