நேற்று அமலாக்கத்துக்கு வந்த பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) தொடர்பில் 800 புகார்களே வந்துள்ளதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்திருக்கிறார் நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான்.
இது, அப்புதிய வரிக்கு ஒரு நல்ல தொடக்கம் என்பதைக் காண்பிப்பதாக அவர் கூறினார்.
“30 மில்லியன் மலேசியர்கள் இருப்பதால் 8,000 அல்லது 18,000 அல்லது 80,000 புகார்களை எதிர்பார்த்தோம்.
“815 புகார்களே வந்திருப்பதைக் கண்டு வியப்படைகிறோம்”, என்று மக்களவை கேள்வி நேரத்தின்போது மஸ்லான் கூறினார்.
நேற்று முதல் எல்லா உணவகங்களும் 50 காசு விலை உயர்த்தியதை அறியாத மட எருமையே, “அரசாங்கத்தில் உள்ளவர்கள்தான் இரவு கொள்ளை அடிக்கிறாங்க என்றல் இன்று GST என்ற பெயரில் உணவகங்கள் பகல் கொள்ளை அடிக்கிறாங்க” என்று மக்கள் பேசுவது கேட்காத செவிட்டு எருமை இது.