அமைச்சர்: நேற்று ஜிஎஸ்டிமீது 23,000 புகார்கள்

megaநேற்று  அமலாக்கம்  கண்ட பொருள்,  சேவை  வரி (ஜிஎஸ்டி)மீதான புகார்களின்  எண்ணிக்கை  தொடர்பில்  அரசாங்கத்துக்கு  முரண்பாடான  அறிக்கைகள் கிடைத்திருப்பதாக  தெரிகிறது.

நேற்று மைகேரா  ஜிஎஸ்டி பயன்பாட்டுச்செயலியில் 23,000  புகார்கள்  பதிவானதாக  உள்நாட்டு வணிக,  கூட்டுறவு, பயனீட்டாளர்  விவகார  அமைச்சர்  ஹசான்  மாலேக்  கூறினார்.

இது, ஜிஎஸ்டி புகார்கள்  பற்றி  நிதி  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான்  கூறியதற்கு  முரணாக  இருக்கிறதே.

மஸ்லான்,  இதுவரை  800  புகார்களே  வந்திருப்பதாக  தெரிவித்திருந்தார்.

“மைகேரா  ஜிஎஸ்டி வழியாக  நேற்று 23,871  புகார்கள் செய்யப்பட்டன. இவற்றில்  8,618  புகார்கள் விலைகள்  சம்பந்தப்பட்டவை”, என  இன்று  கோலாலும்பூரில்  மிட்வேலி  மெகாமாலில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  ஹசான்  கூறினார்.