மகாதிர்: முகைதின் பிரதமராகலாம் ஆனால்……

muhதுணைப் பிரதமர்  முகைதின்  யாசின்  பிரதமராவதற்கு  மிகவும்  தகுதி படைத்தவர்தான்  என்கிறார்  முன்னாள்  பிரதமர்   டாக்டர்  மகாதிர்  முகம்மட். ஆனாலும்  அவரை  அப்பதவிக்குப் பரிந்துரைக்க  மகாதிர்  தயாராக  இல்லை.

தமக்குப்  பின்  பிரதமராக  வந்த  இருவரும்  எதிர்பார்க்கப்பட்டதுபோல்  இல்லை  என்பதால்  “நம்பிக்கை இழந்துவிட்டதாக”க் கூறினார்  அவர்.

“மக்கள்மீது  நம்பிக்கை போய்விட்டது. நியமனம்  ஆவதற்குமுன்  அவர்களே  உலகின் மிகத்  தூய்மையான  மனிதர்களாக  இருந்தார்கள், கொஞ்சமும்  ஊழலற்றவர்களாக  இருந்தார்கள். ஆனால், அதிகாரத்துக்கு  வந்த  பின்னர்  தப்பாக  நடந்து  கொண்டார்கள்.

“அதனால், எனக்கு என்ன  சொல்வதென்று  தெரியவில்லை”.பிரதமர்  நஜிப் அப்துல்  ரசாக்கின் இடத்துக்கு  முகைதின் வருவது  பற்றிக்  கருத்துரைக்குமாறு  கேட்டதற்கு  மகாதிர் இவ்வாறு  கூறினார்.

முன்னதாக, நஜிப்  பதவி  இறங்க  வேண்டும்  என்று  கோரிக்கை  விடுத்த  மகாதிர், அப்படி  அவர்  பிரதமர்  பதவியிலிருந்து  விலகினால்  நடைமுறைப்படி  அடுத்து  பிரதமராகும்  இடத்தில்  இருப்பவர்  முகைதின்தான்  என்றார்.

“அதைக்  கட்சிதான்  முடிவு  செய்ய  வேண்டும். தகுதி  படைததவர்கள்  என்றால்  பலர்  உள்ளனர்.  ஆனால், கட்சி  அமைப்புவிதிகளின்படி  பார்த்தால்  துணைப் பிரதமராக  இருப்பவர்தான் மிகவும்  தகுதி படைத்தவராவார்”, என  புத்ரா  ஜெயாவில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  மகாதிர்  கூறினார்.