கைரி: மகாதிரின் கேள்விகளுக்கு நஜிப் பதில் அளிக்க வேண்டும்

khairiபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  தொடுத்துள்ள   தாக்குதல்  பற்றி  அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடினிடம்  கருத்துக்  கேட்கப்பட்டதற்கு  அவர்  இரு  தரப்புக்கும்  நல்ல  பிள்ளைபோல்  நடந்து  கொண்டார்.

மக்களிடம்  மகாதிருக்கு  அளவற்ற  செல்வாக்கு  இருப்பதால்  அவர் வலைப்பதிவில்  எழுதியதைப் புறந்தள்ளிவிட  முடியாது  என்று  கைரி  கூறினார்.

அதனால், அவர்  எழுப்பியுள்ள  கேள்விகளுக்கு  அவை  ஏற்கனவே  பதில்  அளிக்கப்பட்ட  கேள்விகளாக  இருந்தாலும்  நஜிப் பதில் சொல்லத்தான்  வேண்டும்.

“மகாதிர்  எழுதியவற்றுக்குப்  பதில் கூறத்தான்  வேண்டும். நெருப்புக்  கோழிபோல் தலையை  மண்ணுக்குள்  புதைத்துக்  கொண்டு  பிரச்னை  போய்விடும்  என்று  நினைத்துக்  கொண்டிருக்கக்  கூடாது. அது  சரியல்ல”, என்றாரவர்.

அதே  வேளை  அம்னோ  இளைஞர்  பிரிவு  அமைச்சரவை  ஆகியவற்றின் ஆதரவு  நஜிப்புக்கே  என்பதையும்  கைரி  வலியுறுத்தினார்.

“பிரதமர்  என்ற  முறையிலும்  அம்னோ  தலைவர்  என்ற  முறையிலும்  நஜிப்பின்  தலைமைத்துவத்தின்மீது  நாங்கள்  நம்பிக்கை  கொண்டிருக்கிறோம்”, என்றாரவர்.