மகாதிர்மீது வழக்கு தொடுக்கும் துணிச்சல் உண்டா? நஜிப்புக்கு ரபிஸி சவால்

rafiziபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அவதூறு  வழக்கு  தொடுத்த  சிலரில் பிகேஆர்  உதவித்  தலைவர்   ரபிஸி  ரம்லியும்  ஒருவர்.

இப்போது அந்த  பாண்டான்  எம்பி, தம்மீது  வழக்கு  தொடுத்த நஜிப்புக்கு  அவரை அல்டன்துன்யா  கொலையுடன்  தொடர்புப்  படுத்திப்  பேசியுள்ள  டாக்டர் மகாதிர்மீது  வழக்கு  தொடுக்கும்  துணிச்சல்  இருக்கிறதா  என்று  கேட்டிருக்கிறார்.

“மகாதிரின்  குற்றச்சாட்டுகள்  கடுமையானவை. அரசாங்கத்தையே குற்றம்கூறுபவை.  அவரின் குற்றச்சாட்டுகள்  அம்னோ  உறுப்பினரிடையே நஜிப்புக்குள்ள  நல்ல பேரைக்  கெடுக்கக்கூடியவை.

“அக்குற்றச்சாட்டுகள் (1மலேசியா மேம்பாட்டு  நிறுவனத்தைப்  பொறுத்தவரை) கையாடலில் உடந்தையாக  இருந்தததாவும் (அல்டன்துன்யா  கொலையில்) சதித் திட்டம்  தீட்டியதாகவும்   கூறுகின்றன”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

இப்படிப்பட்ட கடும்  குற்றச்சாட்டுகளுக்கு  எதிராக விசாரணை  தொடங்கியிருக்க  வேண்டும்.  ஆனால், போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு பக்காரின்  எதிர்வினையைப்  பார்க்கையில்  அப்படி  எதுவும் நடக்கும்  எனத் தோன்றவில்லை.

எனவே, நஜிப் தம் பெயருக்கு  ஏற்பட்டுள்ள  களங்கத்தைத்  துடைக்க  நினைத்தால்  மகாதிர்மீது  வழக்கு  தொடுப்பது  ஒன்றே  வழியாகும்.

“நஜிப்  இதைவிட  சிறிய  காரணங்களுக்கெல்லாம் வழக்கு தொடுத்துள்ளார்(மலேசியானியில்  சாதாரண  குடிமக்கள்  தெரிவித்த  கருத்துகளுக்காக).

“அவர்  சட்ட  நடவடிக்கை  எடுக்காவிட்டால் அது  மகாதிர்  கூறிய  குற்றச்சாட்டுகளுக்கு வலுச்  சேர்ப்பதாகவே  அமையும்”, என ரபிஸி குறிப்பிட்டார்.