அரசாங்கம் ரிம116 மில்லியன் செலவில் கட்டிய ஆகாயப் படை கல்லூரியின் (ஏஎப்சி) பயிற்சி மையத்தில் உள்ள குறைபாடுகளை 2014 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
“அங்குள்ள பல கட்டிடங்களும் கட்டமைப்புகளும் பாதுகாப்பு அம்சங்களின்றிக் கட்டப்பட்டுள்ளன. ஆயுதக் கிடங்கைச் சுற்றிப் பாதுகாப்புக்கு வேலி இல்லை.
“சில கட்டிடங்களில் தொடர்புமுறைகள் இல்லை. அதனால் அவற்றைப் பயன்படுத்த முடியாதிருக்கிறது”, என அவ்வறிக்கை கூறியது.
இவை தவிர சோதனைக் கூடங்களும் பயிற்சிக்குப் பொருத்தமற்றவையாக உள்ளன. கல்லூரியின் கால்பந்து திடலுக்கும் நீச்சல் குளத்துக்குமிடையில் தடுப்புகள் இல்லை.
இப்படி பல குறைபாடுகள் இருப்பதால் அரசாங்கம் “அத்திட்டத்துக்குப் பணத்தைக் கொடுத்து முடிப்பதற்குமுன் எல்லா வேலைகளும் சரியாகச் செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தலைமைக் கணக்காளர் வலியுறுத்தியுள்ளார்.
அட, RM10மில்லியன் போட்டு கட்டிய கட்டடங்கள் எல்லாம் இடிந்து விழுந்து இது வரை யார் பொறுப்பு என்றே அறிக்கை வரவில்லை. அதற்கே இந்த நாட்டு மக்கள் ஒன்றும் அலட்டிக் கொள்ளவே இல்லை. ரிம116 மில்லியன் செலவில் கட்டிய ஆகாயப் படை கல்லூரியின் (ஏஎப்சி) பயிற்சி மையத்தில் பல ஓட்டைகள் என்பது மாய ஜாலம் போட்டு அடைத்து விட மாட்டார்களா என்ன அரசாங்க தறுதலைகள்.
இதில் என்ன ஆச்சரியம்? எதில் தான் ஓட்டை இலை? அதிலும் இடஹிப்பற்றி யார் கவலைப்பட போகின்றனர்? எல்லாம் அவன்கள் கையில் இருக்கும் பொது என்ன கவலை– எல்லாமே நடடா ராஜாதான்.
தற்காப்பு அமைச்சில் இல்லாத ஊழலா! ஆண்டிலிருந்து இன்றுவரை பதவியில் இருந்தவங்களின் வங்கி கணக்கை பார்த்தால் புரியும்.