நஜிப் மகாதிரை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதே பிஎன் எம்பிகளின் விருப்பம்

1-sharirமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  எழுப்பும் விவகாரங்களை  எதிர்க்க  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தம்மளவில்  சில  முயற்சிகளை  மேற்கொள்ள  வேண்டும்  என  பிஎன் ஆதரவு  மன்றம்  கேட்டுக்கொண்டிருக்கிறது.

அம்மன்றத்தின்  தலைவரும்  ஜோகூர்  பாரு  எம்பியுமான  ஷாரிர்  சமட்,  பிஎன்  எம்பிகள்  நஜிப்பை  ஆதரிக்கிறார்கள்,  தற்காத்துப்  பேசுகிறார்கள்  ஆனால்  அவர்  தம்மைத்  தற்காத்துக்  கொள்ளுவதே  சிறப்பாக  இருக்கும்  என்றார்.

“இதைப்  பற்றி  பிரதமரிடம்  பேசியிருக்கிறோம். எங்களால்  முடிந்த  மட்டும்  அரசாங்க  ஜெட்  விமானக்  கொள்முதல், 1மலேசியா மேம்பாட்டு  நிறுவனம், பொருள், சேவை  வரி  போன்றவை  பற்றிப்  பேசுவோம்.

“இவற்றுக்கு  எங்களால்  விளக்கம்  கூற  முடியும்.  அதே  நேரத்தில்  சரியான  நேரத்தில் அவரும் இதைப்  பற்றியெல்லாம்  பேச  வேண்டும்  என்பதையும்   அறிவுறுத்தி இருக்கிறோம்.  இது  அவருக்கு  ஒரு  பிரச்னையாக  இருக்காது  என்றே  நினைக்கிறேன்”, என  ஷாரிர்  செய்தியாளர்களிடம்   கூறினார்.