ஹெலிகாப்டரில் இருந்த பெண் யார் என்ற மர்மம் வலுக்கிறது

heliசனிக்கிழமை, செமிஞியில்  விழுந்து  நொறுங்கிய  ஹெலிகாப்டரில்  பயணம்  செய்த  கிர்கிஸ்தான்  பெண் யார்  என்ற  குழப்பம்  நீடித்து  வருகிறது. அந்த  ஹெலிகாப்டரில்  பயணித்த  அறுவருமே  கொல்லப்பட்டனர்.

ஆனால், மற்றவர்கள்  யார், எவர்  என்ற  விவரம்  தெளிவாக  தெரியும்போது  அய்டானா பைஸியவா  பற்றி  மட்டும்  எதுவும்  தெரியாமல்  மர்மமாக  இருக்கிறது.

அவரின்  உறவினர்  என்று  நம்பப்படும்  ஒருவர்  இன்று  அவரது  உடலை  அடையாளம்  காட்டினார். ஆனால்,  அவர்  ஊடகங்களிடம்  பேச  மறுத்து  விட்டார்.

அய்டானா  கிர்கிஸ்தான்  நாட்டவர்  என்பதை  அந்நாட்டுத்  தூதரக  அதிகாரி  ஒருவர்  உறுதிப்படுத்தினார். அவர்  ஓராண்டுக்கு  மேலாக  மலேசியாவில்  இருந்து  வருவதாகவும்  அவர்  தெரிவித்தார்.

அய்டானா  ஹெலிகாப்டர்  ஓட்டுனரின்  உதவியாளர்  என்று  கூறப்பட்டதை  சிவில்  விமானப்  போக்குவரத்துத்  துறை  தலைமை  இயக்குனர்  அஸ்ஹாருடின்  அப்துல்  ரஹ்மான்  மறுத்தார்.

அந்த  ஹெலிகாப்டர்  விபத்தில்  கொல்லப்பட்ட  மற்றவர்கள்  பற்றிய  விவரம்: ரொம்பின்  எம்பி  ஜமாலுடின்  ஜர்ஜிஸ், பிரதமரின்  தனிச்  செயலாளர்  அஸ்லின்  அலியாஸ்,  தொழில் அதிபர் டான்  ஹுவாட் சியாங், ஜமாலுடினின்  மெய்க்காப்பாளர்  ரஸாகான்  சிரான், ஹெலிகாப்டரை  ஓட்டிய  கிலிப்பர்ட் பர்னியர்.