பொடா சட்டத்தில் விசாரணையின்றித் தடுத்து வைக்கும் விதியைத் திருத்துவீர்

potaபயங்கரவாதத்  தடுப்புச்  சட்டத்தில்(பொடா)  உள்ள  விசாரணையின்றிக்  காவலில்  வைக்கும்  விதியைத்  திருத்த  வேண்டும்.

அதற்குப்  பதிலாக  பயங்கரவாதி  என்ற  சந்தேகத்துக்குரியவர்  நீதிமன்றத்துக்குக்  கொண்டுவரப்பட்டு  அங்கு  நீதிபதி  ஒருவர்  அவரை  14  நாள்களுக்கு  விசாரணைக்காக  தடுத்து  வைப்பதா இல்லையா  என்பதை  முடிவு  செய்வார். அதன்  பிறகு  அவர்மீது  குற்றம்  சாட்டப்பட  வேண்டும்  இல்லை  என்றால்  அவரை  விடுவிக்க  வேண்டும்.

பிரிட்டன், ஆஸ்திரேலியா  ஆகிய  நாடுகளில் இதுதான்  நடக்கிறது  என்று  கிளானா  ஜெயா  எம்பி  வொங்  சென்  கூறினார்.

“இந்த  காமன்வெல்த்  நடைமுறையை  மலேசியாவும்  பின்பற்ற  வேண்டும்.

“இது  பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகவும்  இருக்கும் மனித  உரிமைகளையும்  சட்ட  ஆளுமையின்  ஜனநாயகக்  கோட்பாடுகளையும்  பாதுகாப்பதாகவும்  இருக்கும்”.

பயங்கரவாதத்தை  எதிர்ப்பதற்காக  ஜனநாயகத்தைப்  பலி  கொடுக்கக்  கூடாது  என்றவர்  எச்சரித்தார்.

பொடா  சட்டத்துக்கான  உத்தேச  திருத்தங்கள் பற்றிய  அறிவிக்கை  மக்களவைத்  தலைவர்  அலுவலகத்தில் பதிவு  செய்யப்பட்டு  அது  ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் வொங்  கூறினார். பொடா  மீதான நாடாளுமன்ற  விவாதம்  மூன்றாம்  கட்டத்தை  எட்டும்போது  திருத்தங்கள்  முன்வைக்கப்படும்  என்றாரவர்.

இன்று  பொடா   நாடாளுமன்றத்தில்  இரண்டாவது  வாசிப்புக்கு  வந்தது.