அடுத்து ரோஸ்மாமீது தாக்குதல் தொடுப்பாரா மகாதிர்?

net24-மணி  நேரம்  அமைதியாக  இருந்த  அம்னோ-ஆதரவு  இணையத்  தளம்  ஒன்று  மீண்டும்  டாக்டர்  மகாதிர்மீது  சரமாரியாக  தாக்குதலைத்  தொடங்கியுள்ளது.

மகாதிர்  அடுத்து  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூரைத்  தாக்கும்  எண்ணத்தைக்  கொண்டிருக்கிறாரா   என்று  அது  கேள்வி  எழுப்பியுள்ளது.

மகாதிர், செயல்படும்  முறையை  அடிப்படையாக  வைத்து MyKMU.net என்னும்  இணையத்  தளம்  அக்கேள்வியை  எழுப்பியுள்ளது.

நஜிப்புக்கு  முன்னிருந்த  அப்துல்லா  அஹமட்  படாவியைப்  பதவி  விலகச்  செய்யும்  முயற்சியில்  ஈடுபட்டபோது  மகாதிர்  அப்துல்லாவின்  மருமகன்  கைரி  ஜமாலுடினைக்  குறி  வைத்துத்  தாக்கியதை  அது  நினைவுபடுத்தியது.

இப்போது  நஜிப்பின் துணைவியாரைப்  பற்றி  எழுதி  நஜிப் மீது  எதிர்மறையான  கருத்தை  உருவாக்க அவர்  முனையக்  கூடும்  என  அது  கூறிற்று.

இதற்காக  ரோஸ்மா  அம்னோ  விவகாரங்களிலும்  நாட்டின்  நிர்வாகத்திலும்  தலையிட்டார்  என்று  எதிரணியர்  கூறிக்கொண்டிருப்பதை  மகாதிர்  அப்படியே  ஒப்புவிக்கக் கூடும்.

மகாதிர்  22  ஆண்டுக்காலம்  பிரதமராக  இருந்தபோது  அவரின்  துணைவியார்  சித்தி  ஹஸ்மா  அலி  தேசிய  விவகாரங்களில்  தலையிட்டதில்லை   என்ற  கதைகள்  இப்போது  சமூக  வலைத்தளங்களில்  வலம்  வருவதை  அது சுட்டிக்காட்டியது.

“பின்னர்  ஒரு  நாள்  ரோஸ்மாவுடன் ஒப்பிட்டுப்  பேசும் நோக்கம்  இல்லையென்றால்  இது  ஏன்  செய்யப்படுகிறது”, என்று  அது  கேட்டிருக்கிறது.