ஷியாரியா சட்டத்துக்குத் திருத்தங்கள் கொண்டுவரும் தனி உறுப்பினர் சட்டவரைவு இன்றைய நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளது.
ஆனால், ஹாடி அச்சட்டவரைவைத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவாரா என்று தெரியவில்லை. ஏனென்றால், பெரும்பாலும் தனி உறுப்பினர்கள் கொண்டு சட்டவரைவுகள் விவாதத்துக்கே வருவதில்லை.
அச்சட்டவரைவும் நிகழ்ச்சி நிரலில் 24-வது இடத்தில் உள்ளது.
இதற்குமுன் நடப்பில் சட்ட அமைச்சர் நன்சி ஷுக்ரி, அரசாங்கத்தின் பல சட்டவரைவுகள் காத்திருப்பதால் தனி உறுப்பினர் சட்டவரைவு வாசிப்புக்கு வருவது சிரமம்தான் என்று கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
ஹுடுட் சட்ட விவகாரத்தில் டி.எ.பி., பி.கே.ஆர். மற்று பாஸ் கட்சியின் நிலைபாடுகள் தெளிவாக உள்ளது. பாரிசான் கட்சிகள் அனைத்தும் இரட்டை வேஷம் போடுவதால், அதனை தவிர்க்க, இந்த வாசிப்பு, விவாதத்திற்கு வராது என்பதை நிச்சயமாக நம்பலாம்.