தேச நிந்தனைச் சட்டத்தின் புதிய திருத்தங்களில் பிணை கிடையாது

seditionஅரசாங்கம்  இன்று  தேச  நிந்தனைச்  சட்டத்துக்குத்  திருத்தங்களைக்  கொண்டு வரவுள்ளது. இத்திருத்தங்கள்  குற்றவாளிகளுக்குக்  கடும்  தண்டனை  கொடுக்கப்படுவதற்கு  வகை  செய்யும்.

இப்போதுள்ள  சட்டத்தை  வலுப்படுத்தும் வகையில்  கூடின  பட்ச  சிறைத்தண்டனை  20  ஆண்டுகளாகக்  கூட்டப்படுகிறது. குற்றம்  சாட்டப்படுவோர்  பிணையில்  விடப்பட  மாட்டார்கள்.

“தேச  நிந்தனைக்  குற்றங்களால்  உடல் ரீதியாக  காயங்களும்  சொத்துகளுக்கு  இழப்பும் ஏற்படும்  பட்சத்தில்”  அபராதங்கள்  விதிக்கும்  முறை  அகற்றப்பட்டு குறைந்தது  ஐந்தாண்டுச்  சிறை வைக்க  இத்திருத்தங்கள்  வழிகோலுகின்றன.

“குற்றத்தின்  கடுமையைப்  பொறுத்து  குறைந்த  பட்சம்  ஐந்தாண்டும்  கூடின  பட்சம்  20 ஆண்டுகளும்  சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்”, என்று  அச்சட்டவரைவு  கூறுகிறது.

இத்திருத்தங்களின்படி, சிறுசிறு  குற்றங்களுக்கு  இனி  அபராதம்  கிடையாது. குற்றவாளிகள்  குறைந்தது  மூன்றாண்டுகள்  சிறைத்தண்டனை  பெறுவார்கள்.