பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பின்னே ஒளிந்துள்ள பயங்கரம்

Tom_Malinowskiவிசாரணையின்றிக்  காலவரையில்லாமல்  தடுத்து வைப்பதற்கு வகை  செய்திருப்பதால்  அரசாங்கத்தின்  அரசியல்  நோக்கம்  கொண்ட  அதிகார  அத்துமீறல்கள்  இனி  அதிகரிக்கலாம்  என்று  மனித  உரிமை  கண்காணிப்பு  (எச்ஆர்டபள்யு) அமைப்பு  எச்சரிக்கிறது.

அதிகாரிகளுக்கு  தடுத்துவைக்கும்  அதிகாரத்தைக்  கொடுக்கும் பயங்கரவாதத்  தடுப்புச்  சட்டம் (பொடா) நிறைவேற்றப்பட்டிருப்பது, மலேசியாவில்  மனித  உரிமைகளுக்கு  ஏற்பட்ட  “மிகப்  பெரிய  பின்னடைவு”  என  அந்த அமைப்பு  வருணித்தது.

பயங்கரவாதத்தை  எதிர்க்கும்  நோக்கில் அச்சட்டம்  கொண்டுவரப்பட்டிருந்தாலும்  அதைப்  பயன்படுத்தி  புத்ரா ஜெயா  எதிர்ப்புக்  குரல்களை  அடக்கி  ஒடுக்க முயலலாம்  என்ற  அச்சமும்  உள்ளது  என  எச்ஆர்டபள்யு  ஆசியப்  பகுதி  துணை  இயக்குனர் பில்  ரோபர்ட்சன்  கூறினார்.