பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (பொடா) விசாரணையின்றி தடுத்து வைக்க வகை செய்கிறது என்பதால் அது ஓர் அநீதியான சட்டமாகி விடாது என்கிறார் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி.
மக்களவையில் பொடா சட்டவரைவு மீதான விவாதத்தை முடித்து வைத்துப் பேசியபோது அமைச்சர் இவ்வாறு கூறினார். விசாரணையில்லை என்றாலும் நீதி உண்டு என்பதற்கு நடப்பில் உள்ள குற்றத் தடுப்புச் சட்டமே (பிசிஏ) தக்க சான்று.
நேற்று பொடா சட்டவரைவுமீது 14-மணி நேரம் விவாதம் நடந்தது. அதைத் தடுப்பதற்கு எதிரணியினர் எவ்வளவோ முயன்றனர். முடியவில்லை. முடிவில் பின்னிரவு நேரம் அது நிறைவேற்றப்பட்டது.
எவ்வித சட்டம் வந்தாலும் மக்கள் கவலைப் பட மாட்டார்கள். ஆனால், ஆட்சி நடத்துபவர்கள் எப்பேர்ப்பட்டவர்கள் என்பது பொறுத்தது மக்களின் கேள்வியும், கவலையும். தற்சமயம் நம் நாட்டின் நிலை என்னவென்றால், பொறுப்பானவர்களின் கையில் சட்டம் இல்லை. குரங்குக்கு பைத்தியம் பிடித்து,அது மதுவும் அருந்தி,அதற்கு தேளும் கொட்டி, அதன் கையில் ஒரு துப்பாக்கியும் கொடுத்தால்………? என்ன நடக்கும்? தற்போதைய ஆளும் கட்சி மந்திரிகளை நினைத்தால், இந்த குரங்கின் ஞாபகம் வருகிறது.
ஐயோ ! துப்பாக்கியா ? குரங்கு கையிலா ? நீங்கள் சமீபத்தில் ம.இ.கா தலைமையகத்தில் நடந்ததை சொல்கிறிர்களா ???
அட போடா ! முதலில் உன்னைத்தான் பொடா தடுப்பு சட்டத்தில் உள்ளேவைக்கணும்
தமிழில் சொன்னால்” பொடா சட்டம் என்றால் ” போடாத ஒரு சட்டமாகும்.
அரசாங்க தலைமை வழக்குரைஞர் சொல்ல வேண்டியதை சட்டம் அறியாத தற்குறி நாடாளுமன்றத்தில் விளக்கம் சொல்லச் சொன்னால் இப்படிதான் இருக்கும். குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு உரிய அடிப்படை உரிமை அவர் தன்னைத் தற்காத்து வாதிடுவது. நாகரிகம் வளர்ந்த இக்காலத்தில் இந்த அடிப்படை உரிமையைக் கூட ஒருவருக்கு கொடுக்காது தடுத்து வைக்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால் இது சர்வாதிகார நாடாளுமன்றமா? அல்ல சனநாயக நாடாளுமன்றமா?.
வாழைபழ பழ தோட்டத்தை[மக்கள் ] குரங்குகளிடம் கொடுத்து பாதுகாக்க வைத்தால் இதுதான் நடக்கும் !!!!!!!
என்னாது? நம் நாட்டு பிரதமரு chin peng ஆ! சொல்லவே இல்லை!
மலேசிய காவல் துறை BN அரசாங்கத்தின் ஏவல் துறையாகிய பிறகு நீதியாவது வெங்காயமாவது !
பொடா என்பது காட்டுமிராண்டிகளின் அடாவடிதனம் !
விசாரணை இருக்கும் பொழுதே நீதி இல்லை. விசாரணை இல்லைனா நீதி வானத்தில் இருந்தா வரும்?