மலேசிய பட்டதாரிகள் “வில்லன்களாகி” நாட்டை அழிக்காதிருக்க அவர்களுக்கு அறநெறிகள் புகட்டப்பட வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.
“அவர்கள் அறிவாளிகளாக இருந்து அறநெறியற்றவர்களாக இருந்தால், அவர்களின் அறிவைக் கொண்டு நாட்டையே அழித்து விடலாம்.
“அதற்கோர் எடுத்துக்காட்டு, நன்கு படித்தவர்கள் படித்ததை வைத்து குண்டுகள் உருவாக்குவது. இது சாத்தியமில்லாத ஒன்றல்ல”, என நஜிப் கூறினார்.
இன்று கோலாலும்பூரில் தேசிய உயர்க் கல்வி செயல்திட்டம் 2015- 2020-ஐத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது நஜிப் இவ்வாறு கூறினார்.
பட்டதாரிகள் தீயவர்களாக மாறாமலிருப்பதை உறுதிப்படுத்துவதுடன் வருமானத்தையும் பெருக்கிக் கொள்ளவும் பொதுப் பல்கலைக்கழகங்கள் வழி தேட வேண்டும். கூடுதல் ஒதுக்கீடுகளுக்குக் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கக் கூடாது.
“உதாரணத்துக்கு 2025-இல் அரசாங்கம் ரிம14 பில்லியன் வழங்கும். பல்கலைக்கழகங்கள் சுயமாக ரிம4 பில்லியனைத் தேடிக் கொள்ள வேண்டும்.
“இது சிரமம் என்று நான் நினைக்கவில்லை. சில பல்கலைக்கழகங்களிடம் 2,000 ஏக்கர் நிலம் இருக்கிறது இதை வைத்து சில நூறு மில்லியன் ரிங்கிட் வருமானத்தை உருவாக்கலாம்”, என்றாரவர்.
சரியாக சொன்னீர்கள்….. இப்படிபட்ட அறநெறியற்றவர்களால்தான் அல்தொதொய போம் வைத்து கொலை செய்யப்பட்டார் என்கிறீர்கள்…
dark justice ,நீங்களும் சரியாகத்தான் சொல்லுகிறிர்கள்! bn ஆட்சியாளர்களுக்கு shanti போன்ற மட்டிகள் தான் தேவைப்படுகிறது.
சாந்தி மனதை நோகடிக்காதீர்கள் ! அது நம்ப செல்லம் டா ……….
அறிவாளிகளைக் குண்டு வெடுக்கும் கலாச்சாரத்திக்கு மாற்றியது யார்?. மத வெறியை ஊட்டி வளர்த்தவர் யார்?. அதற்கு வழிவிட்டது இந்த தே.மு. அரசாங்கம்தானே!. இன்றும் அதைச் செய்துக் கொண்டிருப்பதால்தானே ISIS தீவீரவாதத்திர்க்கு இங்குள்ளவர்கள் தலை வணங்குகின்றார்கள்!. பிள்ளையைக் கில்லி விட்டு தொட்டிலை ஆட்டுவதும் இந்த தே.மு. அரசாங்கம்தானே. உபதேசம் ஊருக்குதான் தனக்கில்லை என்பதை இந்த பிரதம மந்திரி நிருபிகின்ராரோ?.
என்னடா கருமம் இது !
ஒரு காகம் மற்ற காகங்களை பார்த்து நீங்கள் கருப்பு நிறத்தில் இருக்காதீர்கள் என்று கூறுவதைப்போல் இருக்கிறது.
ஆமாம் அறிவுள்ளவர்கள் உம்மை கேள்வி கேட்பார்கள். ஆபத்துதான்.
அறிவு இருந்ததால் தானே சி4 மூலம் ஒரு அப்பாவி பெண்ணை கொலை செய்ய முடிந்தது. உலக வரலாற்றிலேயே ஒரு தனி மனிதரை வெடி குண்டு மூலம் கொலை செய்யப்பட்டது மலேசியாவில் மட்டுமே!