தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே தேர்தல் ஆணையத்தின்(இசி) வாக்காளர் பதிவில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. இசி வாக்காளர் பதிவுக்கு சிறப்பு விவகாரத் துறை(ஜாசா) அதிகாரிகளைப் பயன்படுத்துவதை அது சுட்டிக்காட்டுகிறது.
2013 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் என்ஜிஓ-களையும் அரசியல் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் உதவிப் பதிவதிகாரிகளாக(ஏஆர்ஓ)ச் செயல்படுவதை இசி நிறுத்திக் கொண்டது.
ஆனால், ஜாசா அதிகாரிகள் இன்னமும் உதவி பதிவதிகாரிகளாகச் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஜோகூர் ஜாசா இணையத் தளத்தைச் சோதித்துப் பார்த்ததில் அதில் உள்ள 52 ஏஆஓ-களில் 35 பேர் பிஎன்னுடன் அல்லது பிஎன்னுடன் தொடர்புள்ள என்ஜிஓ-களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்ததாக பெர்சே இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூறியது.
“மலாக்கா இசி இணையத் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஏஆர்ஓ-கள் அம்னோவையும் பிஎன் -ஆதரவுக் கட்சியான இந்தியர் முற்போக்குக் கட்சி(ஐபிஎப்)யையும் சேர்ந்தவர்கள்”, என பெர்சே செயலக அதிகாரி ஸோ ரந்தாவா கூறினார்.
ஜாசா ஊழியர்களையும் ஆளும் கட்சி உறுப்பினர்களையும் ஏஆர்ஓ-களாகச் செயல்பட அனுமதித்து என்ஜிஓ-களும் எதிரணி உறுப்பினர்களும் ஏஆர்ஓ-களாகச் செயல்பட அனுமதி மறுப்பது இசி-யின் நம்பகத்தன்மைமீதும் நேர்மையின்மீதும் சந்தேகம் கொள்ள வைக்கிறது என ரந்தவா கூறினார்.
ஜாசா என்பது தொடர்பு, பல்லூடக அமைச்சின் பிரச்சாரப் பிரிவாகும்.
நீங்களும் குற்றச்சாட்டுக்கு மேல் குற்றச்சாட்டுகிரிர்கள் ! அதனால் என்ன பயன் ? நடவடிக்கை எங்கே ??
அன்று தொட்டு இன்று வரை வாக்காளர் பதிவில் இருக்கும் பல முறைகேடுகளை நிவர்த்தி செய்ய இந்த ஆணையத்திக்கு விருப்பமே இல்லை காரணம் அது ஆளும் கட்ச்சிக்கு சாதகமாக இருப்பதால். என்று நேர்மையான தேர்தல் ஆணையம் இல்லையோ அன்றே சனநாயகம் செத்து விட்டது என்பது அர்த்தம். பொய்யான சனநாயகம் இந்நாட்டில் இருப்பதற்கான சுவடு இதுதான்.
இந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் முதலில் பதில் கூறட்டும். பிறகு BERSIH 4 தேவையா இல்லையா என்று முடிவு செய்வோம்…..