போலீஸ் காவல் மரணங்கள்: இதுவரை 4 போலீசார்மீது மட்டுமே நடவடிக்கை

custodyபோலீஸ்  காவலில்  நிகழ்ந்த  மரணங்கள்  தொடர்பில்  இதுவரை  நான்கு போலீசார்  மீது  மட்டுமே  நடவடிக்கை  எடுக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில்  தாமஸ்  சூ(டிஏபி- ஈப்போ  தீமோர்)வுக்கு  எழுத்து  வடிவில்  அளித்த  பதிலில்  உள்துறை  அமைச்சர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிடி  இதைத்  தெரிவித்தார்.

போலீஸ்  காவல்  மரணங்கள் தொடர்பில்  இப்போது  வழக்கு  விசாரணையை  எதிர்நோக்கியுள்ளவர்கள்  இதில்  சேர்க்கப்படவில்லை  என  ஜாஹிட்  கூறினார்.

போலீஸ்  காவலில்  நிகழும்  மரணங்களை  அரசாங்கம்  கடுமையாக  கருதுகிறது  என்றும்  அதற்குக்  காரணமானவர்கள்மீது  கடுமையான  நடவடிக்கை  எடுக்கப்படும்  என்றும்  அமைச்சர் தெரிவித்தார்.