‘பொடாவை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் 2.0 எனலாம்’

raguஅண்மையில்  கொண்டுவரப்பட்ட  பயங்கரவாதத்  தடுப்புச் சட்டம் (பொடா), உள்நாட்டுப்  பாதுகாப்புச் சட்டம் 2.0  என  அழைக்கப்படுகிறது.  விசாரணையின்றித்  தடுத்து வைப்பதற்கு  அது இடமளிப்பதுதான்   காரணமாகும்.

இந்த  விதிதான்  அதை  இப்போது  இரத்தாகிப்போன  ஐஎஸ்ஏ–யுடன் தொடர்புப் படுத்திப்  பேச  வைக்கிறது. இச்சட்டத்தின்கீழ்  ஒருவரை ஈராண்டுகள்வரை  விசாரணையின்றித்  தடுத்து  வைக்கலாம். தடுப்புக்  காவலை  ஈராண்டுகள், ஈராண்டுகள்  எனக் காலவரையில்லாமல்  நீட்டித்துக்கொண்டே  போகலாம்.

விசாரணையின்றித்  தடுத்து  வைக்கப்படுவதை  எதிர்த்து நீதிமன்றத்துக்கும்  செல்ல  முடியாது.

இது அரசாங்கத்துக்கு  நீதித்துறை  மீது நம்பிக்கை  இல்லை  என்பதைக்  காண்பிப்பதாக  வழக்குரைஞர்  மன்றத்தின்  முன்னாள்  தலைவர்  இரகுநாத்  கேசவன்  கூறினார்.

“ஏன்  நீதிமன்றம்  செல்வதை  அனுமதிக்க மறுக்கிறீர்கள். உங்கள்  நீதித்துறைமீது  உங்களுக்கே  நம்பிக்கை  இல்லை  என்பதை  நினைக்க சங்கடமாக  இருக்கிறது”.

குற்றம்  எவ்வளவு  கொடூரமாக  இருந்தாலும் நீதி  கிடைப்பதைச்  சட்டம்  உறுதிப்படுத்த  வேண்டும்  என  இரகுநாத்  கூறினார்.