பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல் மே 7-இல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்களிப்பு ஒரு வியாழக்கிழமை நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் ஏப்ரல் 25.
அத்தொகுதி காலியானதாக மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா கடந்த வாரம் அறிவித்தார்.
அத்தொகுதி உறுப்பினரான அன்வார் இப்ராகிமின் மன்னிப்பு கோரிக்கையை மன்னிப்பு வாரியம் நிராகரித்ததைத் தொடர்ந்து அது காலியானதாக அறிவிக்கப்பட்டது.
குதப்புணர்ச்சி வழக்கு ஒன்றில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து அன்வார் இப்போது ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை அனுபவிக்கிறார்.
தேர்தல் நாள் சனிக்கிழமை வைத்திருக்கலாம். வெளியூர்களிலுள்ள வாக்காளர்களின் முக்கியத்துவத்தை தேர்தல் ஆணையம் உணராதது ஏனோ?
இந்த தேர்தல் தேவையா..வீண் செலவு..குடும்ப அரசியல் பண்ணனும் முடிவாயிருச்சி ..இது ஒரு கேடு…