முகைதின்: பொடாவும் ஐஎஸ்ஏ-யும் ஒன்றல்ல

muhiநாட்டில்  பயங்கரவாத  நடவடிக்கைகளைத்  தடுப்பது  அவசியம். அதற்காகக்  கொண்டுவரப்பட்டதுதான்  பயங்கரவாதத்  தடுப்புச்  சட்டம்(பொடா)  என்கிறார்  முகைதின்  யாசின்.

இப்புதிய  சட்டம்  அதைப் பயன்படுத்தும்  அதிகாரத்தைப்  பயங்கரவாதத்  தடுப்பு  வாரியத்துக்குக்  கொடுக்கிறது. அதன்  உறுப்பினர்கள்  பேரரசால்  நியமிக்கப்படுகிறார்கள். இச்சட்டத்தின்கீழ்  தடுத்து வைக்கப்படுவோர்  அவர்களின்  உறவினர்களைச்  சந்திக்கலாம். உறவினர்கள் வழியாக  வழக்குரைஞர்களின்  சேவையையும்  பெறலாம்  எனத்  துணைப்  பிரதமர்  கூறினார்.

பொடா, அதைச்  செயல்படுத்தும்  அதிகாரத்தை  அமைச்சருக்கு  அளிக்கவில்லை.  மேலும், அரசியல்  நோக்கில்  அது பயன்படுத்தப்படாது  என்று  அரசாங்கம்  உத்தரவாதமும்  அளித்துள்ளது.

பொடாவும்  உள்நாட்டுப்  பாதுகாப்புச்  சட்டமும்  ஒன்றல்ல  என்றாரவர்.

“சிலர்  பொடா-வை ‘ஐஎஸ்ஏ 2’  என்கிறார்கள். அது  உண்மையல்ல. இது  பயங்கரவாதப் பிரச்னைகளைச்  சமாளிப்பதற்காகவே  கொண்டுவரப்பட்டது”. முகைதின்  நேற்றிரவு  ஜாகார்த்தாவில்  மலேசியக்  குடிமக்களைச்  சந்திக்கும்  நிகழ்வு  ஒன்றில்  கலந்து  கொண்டபோது  இவ்வாறு  கூறினார்.