இசி: ஜாசா அதிகாரிகளை நியமித்தது தவறில்லை

ecசிறப்பு  விவகாரத்  துறை  அதிகாரிகளை  வாக்காளர்  பதிவாளர்களாக நியமனம்  செய்தது  தவறு  அல்ல  என்கிறது  தேர்தல்  ஆணையம்.

அதே  வேளை  என்ஜிஓ  உறுப்பினர்கள்  உதவிப் பதிவாளர்களாக(ஏஆர்ஓ) செயல்பட  அனுமதிக்கப்படுவதில்லை  என்று  கூறப்படுவதையும்  இசி  தலைவர் அப்துல்  அசீஸ்  முகம்மட்  யூசுப்  மறுத்தார்.

“ஜாசா ஒரு அரசாங்கத்  துறை. நாங்கள்  எப்போதுமே அரசாங்கப்  பணியாளர்களைத்தான் ஏஆர்ஓ- களாக   நியமிப்போம்”, என்றவர்  புத்ரா  ஜெயாவில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

“என்ஜிஓ- உறுப்பினர்களும் ஏஆர்ஓ-களாக  நியமிக்கப்படுவது  உண்டு. சரியான  எண்ணிக்கை  எனக்கு நினைவில்லை. ஆனால், நிறைய  பேர் (என்ஜிஓ உறுப்பினர்கள்) உள்ளனர்.

“அதேபோல்  அஞ்சலக, பல்கலைக்கழக  ஊழியர்களும்  உண்டு”, என அசீஸ்  கூறினார்.

இது,  என்ஜிஓ  உறுப்பினர்களையும்  எதிரணிக் கட்சியினரையும் ஏஆர்ஓ- களாக  நியமிப்பதை  இசி  நிறுத்தி  விட்டதாகக்  கூறப்படுவதற்கு  முரணாக  உள்ளது.