1948 தேச நிந்தனைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யும் சட்டவரைவைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கோபிந்த் சிங் டியோ கொண்டுவந்த தீர்மானத்தை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா புறந்தள்ளினார்.
தேச நிந்தனைச் சட்டம் அரசமைப்புக்கு இணக்கமானதா என்று ஆராயும் வழக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் இன்னும் விசாரணை நிலையில் இருப்பதாக கோபிந்த் கூறினார்.
“நீதிமன்றத்தில் விசாரணை நிலையில் உள்ள வழக்கு சட்டவரைவுக்குத் தடையாகாது”, என பண்டிகார் குறிப்பிட்டார். இந்திய நாடாளுமன்றத்தில் இதேபோன்றதொரு முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
எனவே, சட்டவரைவுமீது விவாதம் செய்யலாம் என்றாரவர்.
அம்னோ சொன்னா சட்டம் பிறர் சொன்னா மட்டம். இதுதான் நாடாளுமன்ற கொட்டம்.