அஸ்மின் அலி (பிகேஆர்- கோம்பாக்) தேச நிந்தனைச் சட்டத் திருத்தத்துக்குத் திட்டமிட்டவர்களும் நாடாளுமன்றத்தில் அதை விரைந்து நிறைவேற்றத் துடிப்பவர்களும் அம்னோ தளபதிகள்தான் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
“சட்டத்திருத்தம் அவசரம் அவசரமாகக் கொண்டு வரப்படுவது ஏன்? சட்டத்தைத் திருத்த வேண்டும் என அம்னோ கட்டளை இட்டதா?
“60 அம்னோ தொகுதித் தலைவர்கள் சட்டத்துறை தலைவரைச் சந்தித்ததாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள்தாம் (தேச நிந்தனைச் சட்டத்தை) நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரச் சொல்லி ஏஜி-க்கு நெருக்குதல் கொடுத்திருக்கிறார்கள்”, என அஸ்மின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனவே, சட்டவரைவைக் கவனமாக ஆராய வேண்டும். அம்னோ அழுத்தம் கொடுக்கிறது என்பதற்காக அவசரப்படக் கூடாது என்றாரவர்.
மீண்டும்! சொல்கிறேன். நம் நாட்டிற்கு ஏழரை சனி பிடித்திருக்கிறது. MH 370 காணாமல் போனது! MH 17 கண் முன்னாலே கோரமாக போனது! எண்ணை விலை தாழ்ந்தது! ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ந்தது! GSTவந்தது! 1MDB க்கு பதில் வந்த பாடில்லை! கிளந்தானில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது! அல்தாந்துயாவின் ஆவி மகாதிமிரை விடாப்பிடியாக மன்றாடுகிறது! ‘பொடா’ சட்டம் மக்களை மிரட்டுகிறது! தேச நிந்தனை சட்டம் ஜனநாயகத்தை வாட்டுகிறது. மீண்டும் சொல்கிறேன், நாட்டிற்கு ஏழரை சனி பிடித்து ஆட்டுகிறது!