பெர்மாத்தாங் பாவில் பக்கத்தான் ஒரு குழுவாக செயல்படும்

dapபினாங்கு  டிஏபி, பெர்மாத்தாங்  பாவ் இடைத்  தேர்தலில்  பிகேஆருடனும்  பாஸுடனும்  இணைந்து  ஒரு குழுவாக  செயல்படும்.

டிஏபி-இன்  இம்முடிவு  பினாங்கு  டிஏபி சோசலிச  இளைஞர் பிரிவின் (டேப்ஸி) முடிவுக்கு  நேர்மாறாக  உள்ளது. டேப்ஸி  தேர்தலின்போது  பிகேஆர்  இளைஞர்  பிரிவுடன்  சேர்ந்து  வேலை  செய்வது  என்றும்  பாஸுடன்  இணைந்து  செயல்படுவதில்லை  என்றும்  முடிவெடுத்துள்ளது.

ஆனால், மாநில  டிஏபி  தலைவர்  செள  கொன்  இயோ,  மூன்று  கட்சிகளும்  ஒரு  குழுவாக  இயங்க  வேண்டும்  என்பது  வியாழக்கிழமை  நடைபெற்ற  பினாங்கு  பக்கத்தான்  ரக்யாட்  கூட்டத்தின்  முடிவு  என்றார்.

“அக்கூட்டத்தில்  மூன்று  கட்சிகளின்  தேசிய  தலைவர்கள்  கலந்து  கொண்டார்கள். டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்  அதற்குத்  தலைமை  தாங்கினார்”, என  செள  இன்று  ஒரு  நிகழ்வில்  தெரிவித்தார்.