‘தோக் ஜங்குட்’ நினைவாக மே 1 ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணி

sabuமே  முதல்  நாள்  பொருள், சேவை  வரி(ஜிஎஸ்டி)க்கு  எதிரான   பேரணி  கிளந்தானின்  சுதந்திரப்  போராட்ட  வீரர்  தோக் ஜங்குட்டின்  பெயரில்  நடைபெறும்.

தோக் ஜங்குட்  1915-இல்  பிரிட்டிஷாரின்  வரிவிதிப்பை  எதிர்த்துப் போராடி  அப்போராட்டத்தில்  உயிர்  நீத்தவர்  என்பதால்தான்  அவர் பேரணியின்  சின்னமாக  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்  என  பாஸ் துணைத்  தலைவர்  முகம்மட்  சாபு  விளக்கினார்.

காமி  அடாலா  தோக்  ஜங்குட்  என்பது  பேரணியின்  சுலோகமாக  இருக்கும்.

“தோக்  ஜங்குட்  பல்வேறு  வகை  வரிகளை  விதித்த  காலனித்துவ  எஜமானர்களை எதிர்த்துப் போராடியவர்.

“இப்போது  பிஎன் ஆட்சியும்  நியாயமற்ற  வரிகளை  விதிக்கிறது. இதற்குப்  பதிலாக  அரசாங்கம்  ஊழலையும்  பண  விரயங்களையும்  எதிர்த்துப்  போராட  வேண்டும்”, என  மாட்  சாபு  கூறினார்.

மே  முதல்  நாளுக்கு  முன்னதாக, சமூக  ஆர்வலர்கள்  சிறுசிறு  பேரணிகளை  ஆங்காங்கே  நடத்த  வேண்டும். அதன்  பின்னர்  கோலாலும்பூர்  பேரணியில்  பெருந்  திரளாகக்  கூட  வேண்டும்  என்று  மாட்  சாபு  கேட்டுக்கொண்டார்.