நீதிபதிகளின் மேசையில் பதவி உறுதிமொழி பிரதி ஒன்று எப்போதும் இருக்க வேண்டும்

cjoathமலேசியாவைப்  பாதுகாக்கவும்  கூட்டரசு  அரசமைப்பை  நிலைநிறுத்தவும்  அவர்கள்  எடுத்துக்கொண்ட  உறுதிமொழியை நிறைவேற்ற  வேண்டும்  எனத்  தலைமை  நீதிபதி  அரிப்பின்  ஜக்கரியா  நீதிபதிகளுக்கு  நினைவுறுத்தினார்.

அந்த  உறுதிமொழி  பிரதி  ஒன்று  எப்போதும்  அவர்களின்  மேசைமீது  இருக்க  வேண்டும்  என்றாரவர்.

“நீங்கள்   செய்த பதவி  உறுதிமொழியை  நினைவுறுத்த  அதன்  பிரதி  ஒன்றை உங்கள்  மேசைமீது  வைத்துக்  கொள்ளுங்கள்  என்பேன்”, என்றாரவர். அரிப்பின்  இன்று  ஐந்து  நீதித்துறை  ஆணையர்கள்  நியமனம்  செய்யப்பட்ட  நிகழ்வில்  பேசினார்.