‘இசி அம்னோவின் கருவி என்பதை இஸ்மாயில் சப்ரி நிரூபித்துள்ளார்’

ismailஅம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  இஸ்மாயில்  சப்ரி, முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  தமக்குச்  சாதகமாக  இருக்கும் வகையில்  தேர்தல்  தொகுதிப்  பிரிப்பில் மாற்றங்களைச்  செய்தார்  எனக்  குற்றம் சாட்டியிருப்பது  தேர்தல்  ஆணையம்(இசி)  ஆளும்  கட்சியின்  “கருவி”யாக  உள்ளது  என்பதைக் காண்பிக்கிறது  என  டிஏபி  கூறுகிறது.

“இஸ்மாயில்  சப்ரியின்  கூற்றைக்  கடுமையான  விவகாரமாகக்  கருத  வேண்டும்.

“பல  கல்வியாளர்களும்  சமூக  ஆர்வலர்களும்  அரசியல்வாதிகளும்  தேர்தல் தொகுதி  பிரிப்பில்  தகிடுதத்தங்கள்  நிகழ்ந்திருப்பற்கான  ஆதாரங்களைக்  காண்பித்துள்ள  போதிலும் இசி-யும்  அரசாங்கமும்  அவற்றை  அடியோடு  மறுத்து  வந்துள்ளன”, என புக்கிட்  பெண்டேரா  எம்பி  ஸைரில்  கீர்  ஜோஹாரி  கூறினார்.

“ஆனால், இஸ்மாயில்  அதை  ஒப்புக்கொண்டிருப்பது  இசி  அம்னோ- பின்னின்  கருவியாக  செயல்பட்டு  13வது பொதுத்  தேர்தலில்  அவர்கள் 48 விழுக்காட்டு  வாக்குகள்  பெற்று  60 விழுக்காட்டு  நாடாளுமன்ற  இடங்களை  வெல்ல  உதவியுள்ளது  என்பதற்குச்  சான்றாகும்”, என  ஸைரில்  ஓர்  அறிக்கையில்  குறிப்பிட்டார்.